திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

விஜய்யை வெறுத்து ஒதுக்கிய முக்கிய இயக்குனர்கள்.. நல்லவேளை என் பையன நானே ஹீரோவா காப்பாத்திட்டேன்

இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகர் அவர்கள் கோலிவுட் சினிமா உலகத்தால் ‘புரட்சி இயக்குனர்’ என்று அழைக்கப்படுகிறார். அரசியல், சமூக அநீதிக்கு எதிராக இவர் பல கருத்து படங்களை இயக்கியிருக்கிறார். கேப்டன் விஜயகாந்துடன் இணைந்து பதினைந்திற்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்து இருக்கிறார். விஜயகாந்திற்கு புரட்சி கலைஞர் என்ற பெயர் வந்ததற்கு இவரின் படங்களும் ஒரு காரணம்.

சமீப காலமாக படங்கள் இயக்குவதிலிருந்து பிரேக் எடுத்து கொண்ட இவர், நிறைய நல்ல கேரக்டர்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு திரைப்படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் பட்டையை கிளப்பியிருந்தார். இந்த படம் மூலம் தன்னை ஒரு நல்ல நடிகராகவும் நிலை நிறுத்தி கொண்ட இவர், நடிகை ராதிகாவுடன் இணைந்து சின்னத்திரை சீரியலிலும் களம் இறங்கியிருக்கிறார்.

Also Read:விஜய் கேட்ட கேள்வியால் வேதனையில் பிரபல நடிகர்.. இப்ப வரை ஆறுதலாக இருக்கும் அஜித்

இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகர் அடுத்து, தங்கர் பச்சானின் இயக்கத்தில் கருமேகங்கள் கலைகின்றன படத்தில் நடிக்கவிருக்கிறார். அழகி, பள்ளிக்கூடம் போன்ற அழகிய காவியங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்த தங்கர் பச்சான் பல வருடங்கள் கழித்து இந்த படத்தை இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும் இணைந்திருக்கிறார்.

கருமேகங்கள் கலைகின்றன பட விழாவில், இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகர் தன்னுடைய மகனும், நடிகருமான தளபதி விஜய்யின் ஆரம்ப கால சினிமா வாழ்க்கையை பற்றி பேசியிருக்கிறார். விஜய் சினிமாவில் நடிக்க கூடாது என ஆரம்பத்தில் தடுத்த எஸ். ஏ. சி, அதன்பின்னர் விஜய்யின் புகைப்பட ஆல்பங்களுடன் பல இயக்குனர்களை சந்தித்தாராம். ஆனால் யாருமே விஜய்யை வைத்து படம் பண்ண முன் வரவில்லையாம்.

Also Read:எவ்வளவு பட்டும் திருந்தாத விஜய்.. பாலகிருஷ்ணாவை தொடர்ந்து மாட்டிய தளபதி – 68

இயக்குனர் பாரதிராஜாவிடம் சென்ற போது, நீயே பெரிய இயக்குனர் தானே, உன் மகனை வைத்து நீயே படம் பண்ணிக்கொள்ள என்று திருப்பி அனுப்பிவிட்டாராம். அதே போல் இயக்குனர் கௌதம் வாசுதேவ்மேனன் கூட விஜய்யை வைத்து படம் பண்ண ஒத்து கொள்ளவில்லையாம். இப்படி பல இயக்குனர்கள் விஜய்க்கு வாய்ப்பு கொடுக்க மறுத்திருக்கிறார்கள்.

அப்படி பலரும் மறுத்ததால் தான், என் மகன் விஜய் படங்களை நானே இயக்கி, அவனை இன்று கமர்சியல் ஹீரோவாக மாற்றியிருக்கிறேன் என்று சொல்லியிருக்கார். உண்மையில் விஜய் சினிமாவுக்கு வந்த புதிதில் அவரை ஒரு ஹீரோவாக நிலைநிறுத்த, எஸ். ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபா சந்திரசேகர் கடுமையாக உழைத்தார்கள். கேப்டன் விஜயகாந்த் மூலம் விஜய்க்கு தமிழ் சினிமாவில் அடையாளம் கிடைத்தது. இயக்குனர் விக்ரமனால் வெற்றி நாயகனாக மாறினார் தளபதி விஜய். இன்று அவருடைய கால்ஷீட்டுக்காக பல இயக்குனர்கள் தவம் கிடக்கின்றனர்.

Also Read:டைம் பாஸ்க்கு காதலித்து நடிகையை கழட்டி விட்ட விஜய்.. அப்பா கண்ட்ரோலில் இருந்ததால் பரிபோன காதல் வாழ்க்கை

 

- Advertisement -

Trending News