சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

லோகேஷ்க்கு போட்டியாக 4 மல்டி ஸ்டார்களுடன் களமிறங்கும் ஷங்கர்.. பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் வேள்பாரி

இயக்குனர் ஷங்கர் தற்போது இந்தியன் 2 மற்றும் தெலுங்கில் ஆர் சி 15 என்னும் இரண்டு படங்களை ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார். வேலையில் படுபிஸியாக இருக்கும் இவர் தன்னுடைய அடுத்த படத்திற்கான வேலையையும் சத்தமில்லாமல் தொடங்கி விட்டார். இம்முறை இவர் சற்றே மாறுபட்டு சரித்திர கதையை படமாக்க இருக்கிறார். சங்கர் இயக்க போகும் முதல் சரித்திர திரைப்படம் இது.

இயக்குனர் மணிரத்தினம் சமீபத்தில் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி என்னும் டாப் ஹீரோக்களை வைத்து எடுத்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அவரை தொடர்ந்து இப்போது இயக்குனர் சங்கரும் புனைவு நாவலை கையில் எடுத்திருக்கிறார். மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எழுதிய ‘வீரயுக நாயகன் வேள்பாரி’ கதையை படமாக்க இருக்கிறார்.

Also Read: பிரம்மாண்ட நாவலை படமாக்கும் ஷங்கர்.. சூர்யாவை விட பாலிவுட் ஹீரோவுக்கு முன்னுரிமையா?

ஏற்கனவே நடிகர் சூர்யா விருமன் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் எம்.பி. சு.வெங்கடேசனுடன் இணைந்து ஒரு ப்ராஜக்ட் தொடங்கி இருப்பதாகவும், விரைவில் அந்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நடிகர் சூர்யாவும், இயக்குனர் சங்கரும் வேள்பாரி படத்தில் இணைகிறார்கள் என்பது ஓரளவுக்கு உறுதியானது.

இதற்கிடையில் சமீபத்தில் சங்கர் இந்த படத்திற்காக ரன்வீர் சிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. இந்த தகவல் ரசிகர்களிடையே ஒரு மிகப்பெரிய குழப்பத்தையே ஏற்படுத்தியது. மேலும் இயக்குனர் சங்கர் இன்னும் சில முன்னணி ஹீரோக்களுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது, சூர்யா இந்த படத்தில் இல்லையா என ரசிகர்களிடையே கேள்வி எழுந்தது.

Also Read: மூன்று பாகங்களாக பல நூறு கோடியில் உருவாகும் பிரம்மாண்ட படம்.. மணிரத்தினத்தை ஓவர்டேக் செய்யும் ஷங்கர்

இப்போது இந்த குழப்பத்திற்கெல்லாம் பதில் அளிக்கும் விதமாக வந்த தகவல் தான், வேள்பாரி திரைப்படம் மல்டி ஸ்டார்களுடன் உருவாக போகிறது என்பது. இதற்காக தான் ரன்வீர் சிங், யாஷ் மற்றும் ராம் சரனுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று இருக்கிறது. அதாவது, ஹிந்தி, கன்னட, தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் தமிழ் சினிமாவில் இணைகிறார்கள்.

ஏற்கனவே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதி 67 ல் விஜய்க்கு வில்லன்களாக சஞ்சய் தத், பிரித்விராஜ் போன்ற மற்ற மொழி நடிகர்களை அணுகினார். இப்போது சங்கர் லோகேஷுக்கு போட்டியாக இந்த முயற்சியை கையில் எடுத்து இருக்கிறார். இன்னும் சில நாட்களில் வேள்பாரி படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் நடித்த 5 படங்கள்.. தியேட்டரில் செம்ம ரெஸ்பான்ஸ்!

Trending News