வில்லனை தேர்வு செய்த ஷங்கர்.. அஜித், சூர்யாவை விட பெஸ்ட் இவர்தான்!

தமிழ் சினிமாவில் அருமையான தொழில்நுட்பம், பிரம்மாண்டம், அதிரடியான சமூக மாற்ற கருத்துக்களை உள்ளடக்கிய படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக வலம் வரும் இயக்குனர் ஷங்கர், தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார். தற்போது பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து RC 15 என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் இந்த படத்தை முடித்த கையோடு நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்ட உலக நாயகன் கமலஹாசனின் இந்தியன் 2 படத்தை இயக்க முடிவெடுத்திருக்கிறார். அந்தப் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதியை நடிக்க வைக்க ஷங்கர் மற்றும் கமல் இருவரும் விரும்புவதாக தெரிகிறது.

ஏனென்றால் விஜய் சேதுபதி கமலஹாசனுக்கு வில்லனாக விக்ரம் படத்தின் மூலம் நடித்து மிரட்டியதால், அதன் பிறகு விஜய் சேதுபதியை அடுத்தடுத்த படங்களில் நடிக்க வைக்க கமல் ஆசைப்படுகிறார். அதேபோன்று இயக்குனர் ஷங்கரும் சமீபத்திய பேட்டி ஒன்றில் சூர்யா, விஜய் சேதுபதி, அஜித் இவர்களுள் கண்டிப்பாக உங்களுடைய படத்தில் வில்லனாக நடிக்க வைக்க வேண்டும் என்றால், உங்களுடைய முதல் தேர்வு யாராக இருக்கும் என்ற கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு ஷங்கர் கொஞ்சம் கூட தயக்கமில்லாமல் விஜய் சேதுபதி தான் என்னுடைய முதல் தேர்வாக இருக்கும் என வெளிப்படையாக கூறியிருக்கிறார். விக்ரம் படத்தில் சூர்யாவும் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து பலருடைய பாராட்டை பெற்றிருக்கிறார். அதேபோல தல அஜித்தின் மங்காத்தா படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர்.

ஆனால் அஜித், சூர்யாவை தேர்வு செய்யாமல் விஜய்சேதுபதியை ஷங்கர் தேர்ந்தெடுத்திருப்பது இந்தியன் 2 படத்தில் அவர் வில்லனாக நடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இது மட்டுமின்றி விஜய் சேதுபதி ஹீரோவாக நடிப்பதை விட வில்லனாக நடிப்பது தான் ரசிகர்களிடம் வரவேற்பு பெறுகிறது என்பதை உணர்ந்த இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் அவரை வில்லனாகவே முத்திரை குத்தி அடுத்தடுத்த படங்களில் நடிக்க வற்புறுத்துகின்றனர்.

அந்த வகையில் ஷாருக்கான் அட்லி நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் ஜவான் திரைப்படம் மற்றும் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 திரைப்படம் ஆகிய இரண்டு படங்களிலும் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் தேவர்மகன் 2 படத்திலும் விஜய் சேதுபதி கமலுக்கு மீண்டும் வில்லனாக நடிக்க வாய்ப்பிருக்கிறது.