சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

இயக்குனர் ஷங்கர் மகள் யாரை திருமணம் செய்ய போகிறார் தெரியுமா? புடிச்சாலும் புளியங்கொம்பை புடிச்சாரு

பிரம்மாண்டம் என்றால் நமது நினைவுக்கு வருவது டைரக்டர் ஷங்கரின் படங்கள்தான். அந்த அளவுக்கு பிரம்மாண்டமான ஒரு விசேஷம் நடக்க போகிறது என எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தது ஒரு கூட்டம். யார் வீட்டில் தெரியுமா? ஆம் நீங்கள் கணித்தது சரிதான் டைரக்டர் சங்கர் வீட்டில் தான் விசேஷம்.

டைரக்டர் ஷங்கருக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் இருக்கிறார்கள் அதில் மூத்த மகளான அதிதிக்கு தான் திருமணம். ஷங்கரின் படங்களை பிரமாண்டமாக இருக்கும் பொழுது அவரின் மகளின் திருமணத்தை நாம் என் நினைத்து பார்க்கும் பொழுது ஆயிரமாயிரம் காட்சிகள் நம் கண் முன்னே வந்து நிற்கின்றன.

திருமணம் முடிந்த பின்பு வரவேற்பு சென்னையில் மிக விமர்சையாக கொண்டாடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உலகத்துக்கே வந்த சிக்கல் நமக்கு வராமல் இருக்குமா?

புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித் என்பவர்தான் ஐஸ்வர்யாவை மணக்க இருக்கிறாராம். ரோகித், டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் விளையாடும் மதுரை பாந்தர்ஸ் அணி உரிமையாளரின் மகன்.

rohit-cricketer
rohit-cricketer

இது கொரோனா காலம் என்பதால் திருமணம் எளிமையான முறையில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் சினிமா படங்களை போன்று பிரம்மாண்டமாக நடத்த வேண்டும் என சங்கர் திட்டமிட்டாராம்.

கடைசியில் இப்படி  ஆகி போச்சி. எது எப்படியோ  ஷங்கர் மகளுக்கு சினிமாபேட்டை சார்பாக திருமண வாழ்த்துக்கள்.

Trending News