வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பிரம்மாண்ட நாவலை படமாக்கும் ஷங்கர்.. சூர்யாவை விட பாலிவுட் ஹீரோவுக்கு முன்னுரிமையா?

இயக்குனர் ஷங்கர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.0 திரைப்படத்தை தொடர்ந்து தற்போது உலக நாயகன் கமலஹாசனின் இந்தியன் 2 படம் மற்றும் தெலுங்கில் ராம்சரண் தேஜாவை வைத்து ஆர் சி 15 என்னும் படத்தையும் இயக்கி வருகிறார். இந்த படங்களை தொடர்ந்து சங்கர் ஒரு சரித்திர படத்தை எடுக்க இருக்கிறார்.

மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் வெற்றியை தொடர்ந்து ஷங்கர் பொன்னியின் செல்வனுக்கு நிகராக வாசகர்களால் விரும்பப்பட்ட வேள்பாரி என்னும் நாவலை படமாக்க இருக்கிறார். வேள்பாரி கதையின் காப்புரிமையையும் அதிகாரபூர்வமாக வாங்கி விட்டார். இந்த படத்தை 1000 கோடி பட்ஜெட்டில் மூன்று பாகங்களாக எடுக்க இருக்கிறார் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர்.

Also Read: மூன்று பாகங்களாக பல நூறு கோடியில் உருவாகும் பிரம்மாண்ட படம்.. மணிரத்தினத்தை ஓவர்டேக் செய்யும் ஷங்கர்

இதற்கிடையில் இந்த படத்தில் வேள்பாரி அரசனாக நடிக்க இருப்பது நடிகர் சூர்யா தான் என கோலிவுட்டில் ட்ரெண்டாகி விட்டது. இந்நிலையில் தற்போது வந்த தகவலின்படி இயக்குனர் ஷங்கர் வேள்பாரி கேரக்டரில் பாலிவுட் ஹீரோ ரன்வீர் சிங்கை நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருக்கிறார். சங்கர் மற்றும் ரன்வீர் சிங் ஒன்றாக இருக்கும் புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

வேள்பாரி போன்ற தமிழ் நாவலில் ஒரு ஹிந்தி நடிகர் நடிப்பது என்பது நிச்சயமாக சாத்தியமான விஷயம் இல்லை. என்னதான் ரன்வீர் சிங் பத்மாவத் போன்ற படங்களில் மன்னனாக நடித்திருந்தாலும், ஒரு தமிழ் நாவலில் நடிப்பது என்பதெல்லாம் அவரால் நிச்சயமாக முடியாது. தமிழ் ரசிகர்களும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 1000 கோடி ப்ராஜெக்ட்டில் ரன்வீர் சிங்கை நடிக்க வைப்பதெல்லாம் மிகப்பெரிய ரிஸ்க் தான்.

Also Read: புது புது பிரச்சினைகளில் சிக்கும் ஷங்கர்.. நிம்மதியை தொலைத்து பரிதவிக்கும் பரிதாபம்

மேலும் இதுபோன்ற கதாபாத்திரங்களில் கச்சிதமாக பொருந்தக் கூடியவர் என்றால் அது நடிகர் சூர்யா மட்டும் தான். ஏழாம் அறிவு திரைப்படத்தில் சில காட்சிகளில் மட்டுமே சூர்யா அரசனாக வந்திருப்பார். அந்த வேடம் அவருக்கு கனக்கச்சிதமாக பொருந்தியிருக்கும். தமிழ் ரசிகர்களுக்கு வேள்பாரி மன்னன் என்றால் அது சூர்யா தான். ரன்வீர் சிங்கை இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தால் கண்டிப்பாக சங்கர் ரசிகர்களின் வெறுப்பையே சம்பாதிப்பார்.

வேள்பாரி நாவல் வேள்பாரி என்னும் பெயரை கொண்ட ஒரு குறுநில மன்னனை மையமாக கொண்ட கதை இது. குறிஞ்சி நிலத்தை ஆண்டு வந்த குறுநில மன்னனான பாரியின் திறமை கண்டு பொறாமையுற்ற சேரன், சோழ,பாண்டியன் அரசர்கள் ஒன்றிணைந்து அவனை துரோகத்தால் வீழ்த்துவது தான் வேள்பாரியின் கதை. இந்த கதை ஆனந்த விகடனில் பிரசுரமான கதை.

Also Read: குடும்ப சண்டையால் சங்கர் எடுக்கும் அதிரடி முடிவு.. இன்னும் 5 வருசத்துக்கு உங்க பக்கமே வரமாட்டேன்

Trending News