செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

சூப்பர் ஹிட் படத்தின் 2ம் பாகத்தை எடுக்கும் சங்கர்.. ரிடைர்ட் ஹீரோவை வைத்து எடுக்கும் பெரிய ரிஸ்க்

Director Shankar: இயக்குனர் ஷங்கர் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறார். இதற்கு முக்கிய காரணம் கேம் சேஞ்சர் படம் ஒன்று. மற்றொரு முக்கிய காரணம் அந்த மூத்த நடிகரை சந்தித்தது தான்.

ராம்சரண் பிறந்த நாளை ஒட்டி கேம் சேஞ்சர் படத்தின் பாடல் ஒன்று வெளியாகிய பெரிய அளவில் வைரலானது. சங்கர் ஒரே சமயத்தில் இந்த படத்தையும் இந்தியன் 2 படத்தையும் இயக்கியது குறிப்பிடத்தக்கது.

இந்தியன் 2 தொடர்ந்து இந்தியன் 3 படத்திற்கான வேலைகளையும் சங்கர் பார்த்து வந்தார். இதற்கிடையில் அவருக்கு தன்னுடைய மற்றொரு சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஆசை வந்திருக்கிறது.

அர்ஜுன் மற்றும் ரகுவரன் நடிப்பில் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் தான் முதல்வன். ஒரு நாள் முதல்வன் என்ற கான்செப்டில் இவர் எடுத்த படம் பட்டி தொட்டி எங்கும் வெற்றி அடைந்தது.

மும்பை பறக்கும் இயக்குனர்

இந்தியன் 2 படத்தை தொடர்ந்து முதல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தை தான் சங்கர் இயக்க இருக்கிறார். ஆனால் அந்த படம் தமிழில் கிடையாது. கடந்த 2001 ஆம் ஆண்டு முதல்வன் படத்தின் இந்தி ரீமேக் நாயக் என்னும் பெயரில் வெளியானது. இதில் அர்ஜுன் கேரக்டரில் அணில் கபூரும், ரகுவரன் கேரக்டரில் அம்ரீஷ் பூரி நடித்திருந்தார்கள்.

தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தான் ஷங்கர் இயக்க போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. முன்னதாக இயக்குனர் சங்கர் இரண்டு தடவை நடிகர் அணில் கபூரை மும்பைக்கு சென்று நேரில் சந்தித்து வந்திருக்கிறார்.

இதில் இவர்களுடைய இரண்டாவது சந்திப்பு நீண்ட நேரம் நடைபெற்றதால் நாயக் படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதியாகிவிட்டது. இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் அணில் கபூருக்கு இப்போது 67 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News