வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

இவர் இயக்கத்தில் நடிச்சாதான் மாஸ் ஆவேன்.. அடம்பிடிக்கும் ஷங்கர் மகன்

தமிழ் சினிமாவில் பல பிரமாண்ட வெற்றி திரைப் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக இருப்பவர் இயக்குனர் ஷங்கர். இவர் தற்போது கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்2 திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இவருடைய மகள் அதிதி சங்கர், நடிகர் கார்த்தியுடன் இணைந்து விருமன் திரைபடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஷங்கரின் மகன் அர்ஜித் சங்கர் தற்போது சினிமாவில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்.

இதனால் சங்கர் தன்னுடைய மகனை இயக்குனர் பாலாஜி சக்திவேல் மூலம் சினிமாவுக்கு அறிமுகப்படுத்த ஆசைப்படுகிறார். பாலாஜி சக்திவேல் காதல், கல்லூரி போன்ற பல வெற்றித் திரைப்படங்களை இயக்கி பிரபலமானவர். தற்போது அவர் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் அவர் ஒரு சில திரைப்படங்களை இயக்கியுள்ளதால் இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருக்கிறது இதன் காரணமாகவே ஷங்கர் தன் மகனை பாலாஜி சக்திவேல் இயக்கும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்த ஆசைப்பட்டார்.

ஆனால் அவரின் மகனுக்கோ அட்லி இயக்கும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக என்ட்ரி கொடுக்க வேண்டும் என்பது ஆசையாக இருக்கிறது. தமிழில் பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் அட்லி. அவர் தற்போது ஹிந்தியில் நடிகர் ஷாருக்கானை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

அந்த திரைப்படத்திற்கு பிறகு அட்லி, சங்கர் மகனை வைத்து ஒரு திரைப் படம் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அர்ஜித், நடிகர் துருவ் விக்ரமின் நெருங்கிய நண்பர் ஆவார். துருவ் ஏற்கனவே திரைப்படங்களில் என்ட்ரி கொடுத்து தற்போது பிரபல நடிகராக இருக்கிறார். இந்த வரிசையில் தற்போது அர்ஜித்தும் சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க தயாராகி வருகிறார்.

Trending News