செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

பச்சை கொடி காட்டியதால் துணிந்து விளையாடும் சங்கர்.. வேற மாதிரி பிசினஸ் ஆவதால் துள்ளிக் குதிக்கும் தில்ராஜ்

Director Shankar spends lavishly on Ram charans Telugu film: உலகநாயகன் கமலஹாசன் மற்றும் சங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தியன் 2 மற்றும் 3 படப்பிடிப்பு நிறைவடைந்து, ரிலீசுக்கு தயாராகி வருவதால் சங்கர் தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார்.

தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளர் தில்ராஜ் தயாரிப்பில்  ராம்சரண் மற்றும் கியாரா அத்வானி நடிப்பில் உருவாகி வருகிறது ஷங்கரின் கேம் சேஞ்சர்.  

இந்தியன் 2  மற்றும் 3 படத்தில் எஸ் ஜே சூர்யாவின் நடிப்பை பார்த்து வியந்த சங்கர், கேம் சேஞ்சர் படத்திலும் ஒரு ஸ்பெஷல் கேரக்டரை உருவாக்கி  நடிக்க வைத்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.

இன்னும் 70 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு உள்ள நிலையில் விறுவிறுவென தயாராகி வருகிறது ராம் சரணின் கேம் சேஞ்சர். அது மட்டும் இன்றி  நாளை மார்ச் 27, இப்படத்தின் ஜருகண்டி பாடல் வெளியாக உள்ளது.

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தின் பட்ஜெட் ஏற்கனவே 450 கோடியை கடந்துள்ளது. 

கேம் சேஞ்சரில் ஆயிரம் கலைஞர்கள் பங்கு கொள்ளும் ஆக்சன் காட்சி

எப்போதும் போல கேம் சேஞ்சர் படத்தில் ஒரு பாடல் காட்சிக்கு மட்டும் 15 கோடி மற்றும் ஆக்சன் காட்சிகளுக்கு 70 கோடி என தயாரிப்பாளர் பணத்தை தாராளமாக செலவு செய்து வருகிறார் சங்கர். 

ஆக்சன் காட்சியில் ஆயிரம் ஸ்டண்ட் கலைஞர்கள் பங்கு கொள்ள உள்ளார்களாம். பான் இந்தியா மூவியாக உருவாவதால் யாரும் இந்த செலவை பெருசாக கண்டு கொள்வதில்லையாம்.

 ரிலீசுக்கு முன்பே பலவகையிலும் இந்த படம் செம பிசினஸ் ஆகி உள்ளது. அதனால்  தயாரிப்பாளர் செலவு பற்றி  கவலை இல்லை என்று சங்கரிடம் கூறியுள்ளாராம்.  கேட்கவா வேண்டும் இந்த பிரம்மாண்ட இயக்குனருக்கு, 

ரமணா படத்தில் கூறுவது போல் “டாக்டர் கிட்டேயும்  வக்கீல்  வக்கில் கிட்டேயும் சொல்லக்கூடாத ஒரே விஷயம், “எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை”. காசுக்காக செத்த பிணத்திற்கு கூட வைத்தியம் பார்ப்பாங்க.

அதுபோல தமிழ் தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே தெரியும் சங்கரிடம் சொல்ல கூடாத விஷயம் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்பது.

சும்மாவே ஆடுவாரு செலவு பற்றி கவலை இல்லை என்று கூறியதும், கேட்க வா வேண்டும் சலங்கை கட்டியது போல் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறார் சங்கர்.

Trending News