வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஒரே ஒரு டெக்னாலஜிக்காக பல கோடியை வாரி இறைக்கும் சங்கர்.. அமெரிக்காவில் நடைபெறும் தரமான சம்பவம்

Director Shankar: தன்னுடைய படங்களில் புதுப்புது டெக்னாலஜியை காண்பித்து மிரள வைப்பவர் தான் இயக்குனர் சங்கர். அதிலும் பிரம்மாண்டத்திற்கு பெயர் போன சங்கர் தன்னுடைய படத்தின் ஸ்பெஷல் எபெக்ட்ஸ் காட்சிகளை அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல் நகரில் நடத்தி வருகிறார்.

லைக்கா மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இந்தியன் 2 படத்தை சங்கர் இயக்கி இருக்கிறார். இதில் கமலஹாசனுடன் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், எஸ் ஜே சூர்யா, பிரியா பவானி சங்கர் பலர் நடித்துள்ளனர். இந்தியன் 2 படத்தில் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து அதற்கான இறுதிக்கட்ட வேலைகளில் சங்கர் முழு வேகமாக ஈடுபட்டு வருகிறார்.

Also Read: அடுத்தடுத்து இரண்டு படங்களின் ரிலீஸ் தேதியை லாக் செய்த கமல்.. கப் சிப்னு வாலை சுருட்டிக் கொள்ளும் ஹீரோக்கள்

அடுத்ததாக சங்கர் ஒரு வாரமாக அமெரிக்காவில் இந்த படத்தின் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தில் 25 வயது கமல் வருவது போல் பிளாஷ்பேக் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாம். இதனால் கமலை 25 வயதாக மாற்ற ‘D Age’ என்ற டெக்னாலஜியை அமெரிக்காவில் பயன்படுத்த சங்கர் அங்கு இருந்து வருகிறார்.

கமலும் அமெரிக்காவில் இருப்பதால் அவரும் இடை இடையில் இந்த வேலைகளை செய்து வருகிறார். இந்த டெக்னாலஜி ‘இந்தியானா ஜோன்ஸ்’ என்ற ஹாலிவுட் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 85 வயது முதியவரை 20 வயது இளைஞனாக மாற்றும் டெக்னாலஜி இது. இதற்கு இரண்டு படத்தின் பட்ஜெட் அதாவது பல கோடிகளை இதற்கு செலவு செய்ய வேண்டும்.

Also Read: பிரம்மாண்ட செலவாளி ஷங்கர் என்ற பெயரை மாற்றும் இந்தியன் 2.. 90% பணத்தை இப்பவே எடுத்த லைக்கா

கமல் நடிப்பில் கடந்த ஆண்டு பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த விக்ரம் படத்தில் உலகநாயகனை சில காட்சிகளில் இளமையாக காட்ட இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த லோகேஷ் நினைத்தார். ஆனால் அதற்காக செலவு அதிகமாகும் என்பதால் அந்தத் திட்டத்தை கைவிட்டார்

இருப்பினும் சங்கர் அந்த செலவை எல்லாம் கொஞ்சம் கூட பொருட்படுத்தவில்லை. ஒரே ஒரு டெக்னாலஜியை படத்தில் பயன்படுத்துவதற்காக பல கோடிகளை இந்தியன் 2 படத்தில் வாரி இறைப்பது தற்போது கோலிவுட்டையே வாயடைக்க வைத்துள்ளது.

Also Read: இந்தியன் 2 வில் வேண்டா வெறுப்பா கமிட்டான உதயநிதி.. ஒத்த படத்தின் மூலமா அடிக்கப் போகும் பெத்த லாபம்

Trending News