திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

குடும்ப சண்டையால் சங்கர் எடுக்கும் அதிரடி முடிவு.. இன்னும் 5 வருசத்துக்கு உங்க பக்கமே வரமாட்டேன்

பிரம்மாண்டங்கள் பஞ்சமில்லாமல் படம் எடுக்கும் சங்கர் சினிமாவிலும் குடும்பத்திலும் பல பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார்.  சமீபத்தில் சங்கரின் மூத்த மகளின் திருமணம் தடைபட்டு, அதைத்தொடர்ந்து இளைய மகள் அதிதி, சங்கரின் அனுமதியின்றி அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆக்குவதால் பெரும் மன வருத்தத்தில் இருக்கிறார். ஆகையால் இரண்டு மகன்களால் நிம்மதியைத் தொலைத்த சங்கர் இப்பொழுது அக்கட தேச படங்களில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது தமிழ் சினிமாவை விட்டுவிட்டு மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு தெலுங்கு பக்கம் சென்று விட்டார். ராம் சரணை வைத்து சங்கர் ஒரு தெலுங்கு படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த படத்திற்காக அவ்வளவு மெனக்கெட்டு வருகிறார். இந்தப் படம் முடிந்தவுடன் அந்நியன் படத்தின் ஹிந்தியில் ரீமேக் படத்தையும் இயக்க இருக்கிறார். இப்படி தொடர்ந்து ஹிந்திப் படங்களை இயக்கும் ஆர்வத்தில் சங்கர் இருக்கிறார்.

இந்த இரண்டு படங்களை முடிந்தவுடனாவது தமிழ்நாடு பக்கம் திரும்பி வருவார் என்று பார்த்தால், இப்பொழுது அதற்கும் ஆப்பு வைக்கும் அளவுக்கு ஒரு செய்தி வெளிவந்து கொண்டிருக்கிறது. அந்நியன் ஹிந்தியில் எடுத்து முடிந்தவுடன் ஜூனியர் என்டிஆர்-ஐ வைத்து அடுத்த படம் எடுக்க போவதாக தகவல் வெளியாகி வருகிறது.

பாலிவுட்டில் இருந்து கிளம்பி டோலிவுட் படங்களை இயக்கும் முடிவில் இருக்கும் சங்கர், தமிழ் சினிமாவிற்கு மொத்தமாக டாட்டா காட்டி விட்டாரா என கோலிவுட் ரசிகர்களுக்கு தோன்றுகிறது. இதனால் சங்கர் மீண்டும் தமிழுக்கு வருவாரா என்பதில் ஒரு பெரிய சந்தேகம் நிலவி வருகிறது.

ஏற்கெனவே அவர் படம் எடுத்தால் இரண்டு மூன்று வருடங்கள் எடுப்பார். இப்பொழுது அக்கட தேசத்து மூன்று படங்கள்  கையில் வைத்திருக்கிறார். அந்தப் படங்களை வெற்றிப் படங்களாக தீவிரமாக முயற்சி செய்து கொண்டிருப்பதால், மீண்டும் தமிழுக்கு வருவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அப்படியே தமிழ் சினிமாவிற்கு சங்கர் வர நினைத்தாலும் இன்னும் 5 வருடங்களாகும். ஏனென்றால் தற்போது அவர் கையில் இருக்கும் மூன்று படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு தான் அடுத்த படமாக தமிழ் படங்களை இயக்க வாய்ப்பிருக்கிறது.

Trending News