தமிழ் சினிமாவில் பிரம்மாண்டத்தின் மறுபெயராகவே இருக்கும் இயக்குனர் ஷங்கரின் படங்களில், தன்னை ஒரு கலைஞன் என்பதை நிரூபிக்கும் வகையில் தன்னுடைய முழு கற்பனையையும் திரையில் காண்பித்து, இந்தியாவின் ‘ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்’ என்று அழைக்கிறார்கள். இதுதான் சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதை பெற்ற அமெரிக்க திரைப்பட இயக்குனர் ஆவார். எனவே ஷங்கரின் இயக்கத்தில் வெளியான படங்களில் இருக்கும் கிராபிக்ஸ் கட்சிகள் இன்றுவரை ரசிகர்களின் மனதில் நிலைநிறுத்தியதுடன், வருங்கால இளம் இயக்குனர்களின் முன்மாதிரியான இயக்குனராக திகழ்கிறார்.
ஜென்டில்மேன்: 1993 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் அர்ஜுன் மது முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இதில் ‘சிக்கு புக்கு ரயிலே’ பாடலில் பிரபுதேவா காதிலிருந்து புகை வரும் போன்ற கிராபிக்ஸ்களை செய்து அசத்தி இருப்பார்.
காதலன்:பிரபுதேவா-நக்மா ஜோடியாக நடித்திருக்கும் இந்தப் படத்திலும், பிரபுதேவாவை வைத்து எக்கச்சக்கமான வித்தைகளை ஷங்கர் படத்தில் காட்டியிருப்பார். அதுமட்டுமின்றி ‘முக்காலா முக்காபுலா’ பாடலில் இவர் செய்யாத தில்லாலங்கடி வேலைகளே இல்லை.
ஜீன்ஸ்: 1998 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தில் பிரசாந்த்-ஐஸ்வர்யாராய் நடிப்பில் உருவான காதல் திரைப்படத்தில் ‘ஹைரா ஹைரா ஹைரப்பா’ பாடலில் உலக அதிசயங்களை கண்டித்ததுடன், கொலம்பஸ் பாடலில் நிறைய கிராபிக்ஸ் காட்சி காட்சிகளை பயன்படுத்தியிருப்பார். அத்துடன் முதல் முதலாக டைனோசரை திரையில் கொண்டு வந்தது ஷங்கர் மட்டுமே.
இந்தியன்: ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசனின் நடிப்பில் உருவானஆக்ஷன் திரைப்படமாக கடந்த 1996ம் ஆண்டு வெளிவந்த இந்தப்படத்தில் ‘மாயா மச்சீந்திரா’ பாட்டில் ஷங்கர் கையாண்ட கிராபிக்ஸ் காட்சிகள் அபாரம்.
முதல்வன்: அர்ஜுன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படமும் ஷங்கரின் அட்டகாசமான இயக்கத்தை வெளிக்காட்டி இருக்கும் படமாகும். அதிலும் இதில் முதல்வனே பாடலில் முழுக்க முழுக்க பாம்பு கட்டங்களைக் கொண்ட கிராபிக்ஸ் ஆட்சியை அமைத்து அசத்தியிருப்பார்.
எந்திரன்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ரோபோவை கதாநாயகனாகவே சித்தரித்து முழுக்க முழுக்க கிராபிக்ஸ் ஆவணப்படம் இதை பற்றி சொல்லவே வேண்டாம்.
இப்படி ஷங்கர் படத்தின் இடம்பெற்ற கிராபிக்ஸ் காட்சிகள் அவருக்கே உரித்தான பாணியில் ரசிகர்களை கவர்ந்து இன்று ரிப்பீட் மோடில் பார்க்கத் தூண்டும் ரசிகர்களின் மனதை கவர்ந்த படங்களாக மாறியுள்ளது.