புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அடி மேல் அடி வாங்கும் ஷங்கர்.. சினிமாவிலும் தலை விரித்தாடும் மோசமான ராசி

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வந்த ஷங்கர் தற்போது தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். மிக அதிக பொருள் செலவில் உருவாகும் இந்த திரைப்படத்தின் சூட்டிங் ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பொதுவாக சங்கர் படம் என்றாலே பிரம்மாண்டத்திற்கு பஞ்சம் இருக்காது. அதேபோன்று அவருடைய படங்களில் ஒவ்வொரு விஷயத்திற்கும் ஏகப்பட்ட செலவு செய்து பிரம்மாண்டமாக எடுக்கப்படும். இப்படித்தான் அவர் தமிழ் சினிமாவில் இதுவரை படங்களை எடுத்துக் கொண்டிருந்தார்.

அதே போன்று தான் தற்போது தெலுங்கிலும் இவர் பல கோடி செலவில் பிரம்மாண்டமாக செட் போட்டு படமாக்கி வருகிறார். ஆனால் அதில் தான் தற்போது ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. என்னவென்றால் ஆந்திராவில் வரும் 1ம் தேதி முதல் மொத்த சினிமா ஷூட்டிங் ஸ்ட்ரைக் காரணமாக நிறுத்தப்படுகிறது.

அந்த வகையில் ஏகப்பட்ட செலவு செய்து எடுக்கப்பட்டு வரும் ராம்சரணின் படமும் நின்றுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் இவ்வளவு செலவு செய்து போட்டு வைத்த அத்தனை செட்டும் வீணாகி பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும்.

இதனால் சங்கர் தற்போது தீவிர மன உளைச்சலில் இருக்கிறாராம். ஏனென்றால் சமீப காலமாக அவருக்கு பர்சனல் வாழ்வில் ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கிறது. மேலும் தமிழில் அவர் இயக்கிக் கொண்டிருந்த இந்தியன் 2 திரைப்படமும் சில காரணங்களால் நின்று போனது.

இப்படி பெரும் பிரச்சனைகளுக்கு இடையில் தான் அவர் தெலுங்கு படத்தை இயக்க ஆரம்பித்தார். தற்போது அதிலும் இடி விழுந்துள்ளது. அந்த வகையில் பிரச்சனைகள் அவர் எங்கு போனாலும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதைப் பார்த்த பலரும் மோசமான ராசி சங்கரை சுற்றி கொண்டே இருக்கிறது என்று கூறி வருகின்றனர்.

Trending News