சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

இனிமே படத்தை தயாரிக்கவே மாட்டேன்.. பிரபல தயாரிப்பு நிறுவனத்தை நடுரோட்டுக்கு கொண்டு வந்த சங்கர்

Director Shankar caused loss to many producers: கோலிவுட்டின் ‘பிரம்மாண்ட இயக்குனர்’ என சொல்லப்படுபவர் தான் இயக்குனர் சங்கர். இவருடைய படங்களில் புதுப்புது டெக்னாலஜியை அறிமுகப்படுத்தியதால் சங்கர் இயக்கும் படங்கள் என்றாலே ரசிகர்களிடம் கொஞ்சம் ஸ்பெஷல்தான். தற்போது சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் இரண்டு பாகங்களாக அடுத்தடுத்து ரிலீஸ் ஆகிறது.

முதலில் இந்தியன் 2 படமும் அதைத்தொடர்ந்து இந்தியன் 3 படத்தையும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். சங்கர் இந்தியன் 2 படப்பிடிப்பின் போது தேவை இல்லாமல் நிறைய காட்சிகளை எடுத்து வைத்து பட்ஜெட்டை பெரிதாக்கியது மட்டுமல்லாமல் ஐந்து மணிக்கு தேவையான காட்சிகளை எடுத்து வைத்திருக்கிறார். இதனால்தான் இந்த படத்தை இரண்டு பாகங்களாக வெளியிடப் போகின்றனர்.

இதே போன்று தான் சங்கர் பல தயாரிப்பாளர்களுக்கு எக்குத் தப்பாக செலவை இழுத்து விட்டு, அவர்களை எல்லாம் நடுரோட்டிற்கு வர வைத்திருக்கிறார் என்று பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டியில் மொத்தத்தையும் போட்டுடைத்துள்ளார். சங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் வெளியான ஜென்டில்மேன் படத்தை தயாரித்த கே.டி.குஞ்சுமோன், அந்தப் படத்திற்கு பின்பு எந்த படத்தையும் தயாரிக்காமல் காணாமல் போய்விட்டார்.

Also Read: சங்கரின் அற்புத படைப்பால் ஜெயித்து முண்ணுக்கு வந்த 5 ஹீரோக்கள்.. பிரபுதேவாவை ரொமான்டிக் ஹீரோவாக மாற்றிய படம்

தயாரிப்பாளர்களை நடுரோட்டிற்கு கொண்டு வந்த இயக்குனர் சங்கர்

அதேபோல்தான் ஐ படத்தை தயாரித்த ஆஸ்கர் ரவிச்சந்திரன் இப்போது ஆள் அட்ரஸே தெரியாமல் தொலைந்து போய்விட்டார். அது மட்டுமல்ல பல வருடங்களாக தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்துக் கொண்டிருந்த பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம், இதற்கு மேல் படத்தை தயாரிக்கவே மாட்டேன் என்ற முடிவுக்கு வர காரணமே இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான சிவாஜி படம் தான் என்று பயில்வான் ரங்கநாதன் தற்போது பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.

சங்கர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக இருப்பவர். அவரை இப்போது பயில்வான் ரங்கநாதன் வம்புக்கு இழுத்துள்ளார். இதற்கு சங்கரும் விரைவில் சரியான பதிலடி கொடுப்பார் என்று அவருடைய ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Also Read: கமல், ஷங்கர் கூட்டணியை அவமானப்படுத்தும் விஷால்.. லைக்கா மீது தொடர்ந்த வழக்கு

Trending News