புதன்கிழமை, ஜனவரி 15, 2025

விஜய்க்கு ஆதரவாக களம் இறங்கி.. அனைத்து அரசியல்வாதிகளையும் வறுத்தெடுத்த பிரபல இயக்குனர்

தமிழ் சினிமாவில் பல அவமானங்களை சந்தித்து கடுமையாக உழைத்து உச்ச நட்சத்திரமாக உயர்ந்தவர் தளபதி விஜய். தற்போதுதான் நடிப்பதை நிறுத்திவிட்டு அரசியலில் களம் இறங்கியுள்ளார்.

விஜய் தனது கட்சியின் பெயராக ‘தமிழக வெற்றி கழகம்’ என்று அறிவித்தார். அதற்காக அவர் தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தினார். அங்கே வந்த கட்டுக்கடங்காத கூட்டத்தையும், விஜயின் பேச்சையும் கண்ட அரசியல்வாதிகள் விழி பிதுங்கி நின்றனர்.

அதோடு மட்டுமல்லாமல், என்னடா நேற்று வந்த உனக்கு இவ்வளவு கூட்டமா என்று அரண்டு போய் வாய்க்கு வந்ததெல்லாம் பேசி விஜயை அவன் ஒரு கூத்தாடி என்றெல்லாம் விமர்சனம் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

இதனால் கடுப்பாகிய விஜயை வைத்து திருப்பாச்சி, சிவகாசி படங்களை இயக்கிய இயக்குனர் பேரரசு கொந்தளித்துள்ளார். ஆமாம், நாங்கள் கூத்தாடி தான். நாங்கள் அதை பெருமையாக சொல்வோம், கலைஞர் ஒரு கூத்தாடிதான். எம்ஜிஆர் ஒரு கூத்தாடிதான்.

அதில் எங்களுக்கு ஒன்றும் குறை இல்லை. நல்லதை நாங்கள்தான் சினிமாவில் சொல்கிறோம். அரசியலில் இருந்து சினிமாவுக்கு வந்து நடிக்கலாம், ஒரு நடிகர் அரசியலுக்கு வரக்கூடாதா என்று கடுமையாக சாடினார்.

விஜய்க்கு ஆதரவுக் குரல் பெருகிக்கொண்டே போகிறது. தைரியமான பேரரசுக்கு வாழ்த்துக்கள் என்று நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

Trending News