ஒரு சமயத்தில் இந்திய சினிமாவில் #MeToo விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல நடிகைகள் திரையுலகில் தங்களுக்கு எதிராக நடந்த பா**யல் அத்துமீறல்களையும், யார் அப்படி நடந்து கொண்டார்கள் என்ற உண்மையையும் பொதுவெளியில் போட்டு உடைத்தார்கள். இதில் பல பிரபலங்களின் பெயர் அடிபட்டது.
அதில் ஒருவர் தான் பிரபல இயக்குனர் சுசி கணேசன். கடந்த 2017ஆம் ஆண்டு பாலிவுட் தயாரிப்பாளர் லீனா மணிமேகலை இயக்குனர் சுசி கணேசன் தனக்கு பா**யல் தொல்லை அளித்ததாக பரபரப்பு புகாரை அளித்திருந்தார். இது இந்திய திரையுலகில் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சுசி கணேசன் லீனா மணிமேகலை மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தனக்கு பாதுகாப்பு இல்லை என கூறி லீனா மணிமேகலை அவரது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டிருந்தார். அவர் கூறியிருந்ததாவது, “எனக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. எனக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று என் அம்மா ஒருமணி நேரத்துக்கு ஒருமுறை போன் செய்து விசாரித்துக்கொண்டே இருக்கிறார். எனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு சுசி கணேசன்தான் காரணம்” என பதிவிட்டிருந்தார்.
மேலும் அந்த சமயத்தில் தனக்கு ஆதரவாக குரல் கொடுத்த நடிகை அமலாபால் மற்றும் நடிகர் சித்தார்த் ஆகிய இருவரையும் கடந்த காலங்களில் மிரட்டியது போல, தற்போது தனக்கு துணை நிற்கும் பத்திரிகையாளர்களுக்கு மிரட்டல்கள் வருவதாக லீனா மணிமேகலை கூறியுள்ளார்.
சுசி கணேசன் விவகாரம் டிரெண்டிங்கில் இருந்த சமயத்தில் தயாரிப்பாளர் லீனா மணிமேகலைக்கு ஆதரவாக டிவீட் செய்த நடிகர் சித்தார்த்தையும், அவரின் வயதான தந்தையையும் மிரட்டியதாக சித்தார்த்தே அந்த சமயத்தில் டிவிட் செய்திருந்தார். அதேபோல் திருட்டுப்பயலே 2 படப்பிடிப்பபின் போது பா**யல் ரீதியாக தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என சுசி கணேசனுக்கு எதிராக பதிவு செய்த அமலா பாலை சுசிகணேசனும் அவர் மனைவியும் சேர்ந்து மிரட்டியதாக அமலா பால் பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் தற்போது லீனா மணிமேகலை தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியிருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இத்தனை ஆண்டுகளாக இந்த பிரச்சனை முடியாமல் இன்னும் தொடர்ந்து கொண்டு வருவது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.