வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

அதர்வா என்ன பெரிய அஜித்தா.? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாதுன்னு மல்லு கட்டிய இயக்குனர்

Actor Atharva: வாரிசு நடிகர்களாக இருந்தாலும் திறமையும், பணிவும் இருந்தால் தான் முன்னேற முடியும் என்பதற்கு விஜய் போன்ற நடிகர்கள் எடுத்துக்காட்டாக உள்ளனர். ஆனால் அதர்வா போடும் ஆட்டம் தான் இப்போது கோலிவுட் சினிமாவையே அல்லோலபடுத்தி வருகிறது. பானா காத்தாடி என்ற முதல் படம் ஹிட் கொடுத்தார்.

அடுத்தடுத்து நடுவில் தொடர் தோல்வி கொடுத்தாலும் இப்போது வரை அவர் சினிமாவில் நிலைத்து நிற்க அவரது தந்தை முரளி முக்கிய காரணம். அவரின் மீது உள்ள மரியாதை காரணமாக இவருக்கு இப்போதும் பட வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் இவரது ஆட்டிட்யூட் பல தயாரிப்பாளர்களுக்கு பிடிக்கவில்லை.

Also Read : விஜய்க்கு போட்டியாக இறங்க நேரம் பார்க்கும் அஜித்.. ரமேஷ் கண்ணா வைத்த ட்விஸ்ட்

இதனால் அதர்வாவுக்கு ரெட் கார்ட் கொடுக்கும் அளவிற்கு சினிமா கேரியர் போய்க்கொண்டிருக்கிறது. இந்நிலையில் கோவிட் தொற்றுக்கு முன்னதாக அதர்வா ஒரு படத்தில் கமிட்டாகி இருந்துள்ளார். அப்போது இந்த படத்தின் பாதி காட்சிகள் படம் ஆக்கப்பட்ட நிலையில் பாதியிலேயே கொரோனாவால் தடைபட்டது.

அதன் பிறகு மீண்டும் ஆறு மாதம் கழித்து ஷூட்டிங் தொடங்கலாம் என்று இயக்குனர் திட்டமிட்டு இருந்தார். ஆனால் அந்த கோவிட் தொற்று காலத்தில் எல்லோரும் வீட்டிலேயே முடங்கி கிடந்த நிலையில் நன்றாக சாப்பிட்டு அதர்வா உடம்புக்கு போட்டு விட்டார். இதனால் இயக்குனர் பாதி காட்சிகளில் ஒல்லியாக இருக்கிறீர்கள், இப்போது இந்த உடம்புடன் படத்தை எடுத்தால் நன்றாக இருக்காது.

Also Read : அஜித்தின் மச்சானால் பெருமூச்சு விட்ட தம்பி ராமையா.. புளியங்கொம்பை பிடித்த மகன்

ஆகையால் இப்போது உடம்பை குறைக்க சொல்லி இருக்கிறார். ஆனால் அதர்வாவோ அதெல்லாம் என்னால் முடியாது என இயக்குனரிடம் சண்டையிட்டு உள்ளார். அதன் பிறகு அதர்வாவின் மேனேஜர் அந்த இயக்குனரிடம் நீங்கள் அவரை எப்படி கோபமாக பேசலாம், அதர்வாவிடம் வந்து மன்னிப்பு கேளுங்கள் என்று கூறி இருக்கிறார்.

அதற்கு இயக்குனர் உங்கள் அதர்வா என்ன அஜித்தா, அவரிடம் எல்லாம் என்னால் மன்னிப்பு கேட்க முடியாது என மல்லுக்கட்டி இருக்கிறார். ஆடிக்கு ஒரு முறை, அமாவாசைக்கு ஒரு முறை தான் அதர்வாவுக்கு பட வாய்ப்பு வருகிறது. இயக்குனரிடம் கொஞ்சம் பணிவாக போயிருந்தால் இந்தப் படமாவது வெளியாகி இருக்கும். இப்போது அந்த படமும் அந்தரத்தில் தொங்குகிறது.

Also Read : 10 படங்களுக்கு மேல் நடித்தும் நோ ஹிட்.. அதர்வா போல் கேரியரை தேடும் 6 ஹீரோக்கள்

Trending News