செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

குடும்பம் இருந்தும் அனாதையாக இறந்து கிடந்த துயரம்.. இயக்குனருக்கு நேர்ந்த சோகம்!

ஏ வி எம் தயாரிப்பு நிறுவனத்தின் 150 வது திரைப்படம் மாநகர காவல். இப்படத்தில் விஜயகாந்த், சுமா, லட்சுமி, நாசர், ஆனந்தராஜ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இயக்குனர் தியாகராஜன் இப்படத்தை இயக்கியிருந்தார்.

இப்படத்தில் விஜயகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். 1991 இல் வெளிவந்த இப்படம் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்திற்கு பிறகு இயக்குனருக்கு பெரிதாக இயக்கும் வாய்ப்பு எதுவும் வரவில்லை. இந்நிலையில்  இயக்குனர் தியாகராஜன் நேற்று வடபழனி சாலையில் மரணம் அடைந்து கிடந்தார்.

இந்த செய்தி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சாலையில் கிடந்த அவரை பார்த்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இவருக்கு மனைவி மற்றும் மகன், மகள் உள்ளனர். இவர் குடும்பத்துடன் சண்டை போட்டு, தனியாக பிரிந்து வடபழனியில் வாழ்ந்து வந்துள்ளார். அவருடைய மனைவி 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதனால் அவர் அதிக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் அவர் ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு அருகில் கூடாரம் அமைத்து அங்கு இருக்கும் அம்மா உணவகத்தில் உணவு சாப்பிட்டு வந்துள்ளார். உடல்நிலை குறைவு காரணமாக தற்போது இவர் தெருவோரமாக இறந்து கிடந்துள்ளார்.

அவருடைய பிள்ளைகள் இருவரும் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். இவரின் சகோதரர் முன்னாள் எம்.எல். ஏ வாக இருந்தவர். தற்போது அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவருடைய சகோதரரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கோடிக்கணக்கில் பணம் புரளும் சினிமா உலகில் இது போன்று சிலர் அனாதையாக இறந்து கிடக்கும் சம்பவங்கள் நிகழத்தான் செய்கிறது. தியாகராஜனின் இந்த மரண செய்தி பொதுமக்கள் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Trending News