செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

இயக்குனராக இருந்து குணச்சித்திர நடிகராக முத்திரை பதிக்கும் நடிகர்.. அசுரனில் தனுஷை அலைய விட்ட பிரபலம்

சமீபத்தில் எல்லா படத்திலும் தலை காட்டக்கூடிய ஒரு குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிக்கக் கூடியவர்கள் மக்கள் மத்தியில் வெகு சீக்கிரமே பிரபலமாகி விடுகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் இயக்குனராக இருந்து பல ஹிட் படங்களை கொடுத்ததன் மூலம் பிரபலமான ஒருவர் தற்பொழுது குணச்சித்திர நடிகராக அவதாரம் எடுத்துள்ளார். அதுவும் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கக்கூடிய தனுஷ் படத்தில் நடித்தது மட்டுமல்லாமல் அவரையே அலையவிட்டும் இருந்திருக்கிறார்.

இந்நிலையில் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் அசுரன். இப்படத்தில் தனுஷ் அப்பா மற்றும் மகன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். அசுரன் திரைப்படமானது வெக்கை என்னும் நாவலை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்ததாகும்.

Also Read: சிகரம் தொட்ட சிவகார்த்திகேயன்.. தனுஷுக்கு முன்பே சிவாவை அடையாளம் கண்ட நடிப்பு அரக்கன்

இப்படமானது அன்றைய காலகட்டத்தில் சமூகத்தில் மிகவும் பெரிதாக பார்க்க கூடிய ஜாதியினை மையமாக வைத்து ஏற்படும் கலவரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் படமாக எடுக்கப்பட்டதாகும். அதிலும் இந்த மாதிரியான சம்பவங்களுக்கு சாதகமாக ஒருதலை பட்சமாக இருக்கக்கூடிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் தான் இயக்குனர் பாலாஜி சக்திவேல்.

இதில் தனுஷிற்கு எதிராக போலீஸ் கதாபாத்திரத்தில் தனது வில்லத்தனமான நடிப்பின் மூலம் மிரட்டி இருப்பார். அதுவும் அசுரன் படத்தில் சமூகத்தில் நடைபெறக்கூடிய அநீதிகளுக்கு சாதகமாக இருக்கக்கூடிய குணச்சித்திர கதாபாத்திரத்தில் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியதன் மூலம் அனைவரது பாராட்டையும் பெற்றார்.

Also Read: அங்க போறீங்களா என வெற்றிமாறனுடன் மல்லு கட்டிய தனுஷ்.. வேறு வழி இல்லாமல் தொடங்கும் 2-ம் பாகம்

மேலும் இவர் பிரம்மாண்ட இயக்குனராக இருக்கக்கூடிய சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியதன் மூலம் தமிழ் சினிமாவில் தனது பயணத்தை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து இவர் காதல், கல்லூரி, சாமுராய், வழக்கு எண் 18/9 போன்ற படங்களை பாலாஜி சக்திவேல் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் நீங்க இடம் பிடித்த பல ஹிட் படங்களை கொடுத்ததன் மூலம் பிரபலமானார். தற்பொழுது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து நடிகராகவும் பிரபலமாகியுள்ளார். இந்நிலையில் தொடர்ந்து இதுபோன்ற குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் ஒரு சிறந்த நடிகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: மேடையில வெச்ச ஐஸ் வேலையை காட்டுது.. தனுசுக்கு தண்ணி காட்டிய வெற்றிமாறன்

Trending News