செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

நடிக்க மாட்டேன்னு சொன்ன GVM கை வசம் இத்தனை படங்களா?. பணம் பத்தும் செய்யும் போலிருக்கே!

Gautham Vasudev Menon: துருவ நட்சத்திரம் படப்பிடிப்பு சமயத்தில் ஏற்பட்ட கடனை அடைப்பதற்காக தான் படங்களில் நடிக்க ஆரம்பித்ததாக கௌதம் மேனன் ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார். அது மட்டும் இல்லாமல் இனி நடிக்கப் போவதில்லை என்றும், முழுக்க முழுக்க படங்கள் இயக்குவதிலேயே கவனம் செலுத்த போவதாகவும் உறுதியாக சொல்லி இருந்தார். படம் நடிக்க மாட்டேன் என்று சொன்ன GVM கையில் தற்போது அரை டஜன் படங்கள் இருக்கிறது. அதைப்பற்றி பார்க்கலாம்.

GVM கை வசம் அரை டஜன் படங்கள்

ஜோஷுவா: வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் கௌதம் மேனன் இயக்கியிருக்கும் படம் தான் ஜோஷுவா. இந்த படத்தில் தயாரிப்பாளர் ஐசரி கணேசன் மகன் வருண் நடித்திருக்கிறார். இந்தப் படம் வரும் மார்ச் ஒன்றாம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில், நேற்று படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது. கௌதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு தற்போது ஜோஷுவா படம் திரையில் ட்ரீட்டாக அமைய இருக்கிறது.

ஹிட்லர்: இயக்குனர் தனா இயக்கத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் விஜய் ஆண்டனி இருவரும் இணைந்து நடித்திருக்கும் படம் தான் ஹிட்லர். இந்த படத்தின் டீசர் கடந்த டிசம்பர் மாதம் வெளியாகி பெரிய அளவில் எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது. இந்த படத்தில் கௌதம் மேனன் காவல் அதிகாரியாக நடித்திருக்கிறார். நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை நாம் எதிரி தான் முடிவு செய்ய வேண்டும் என வரும் இந்த படத்தின் டீசர் டயலாக் மிகப் பெரிய அளவில் வைரலாகியது.

ரத்னம்: தாமிரபரணி ஹிட்டுக்கு பிறகு ஹரியுடன் மீண்டும் நடிகர் விஷால் கூட்டணி அமைத்திருக்கும் படம் தான் ரத்னம். ப்ரியா பவானி சங்கர் ஹீரோயினாக நடித்திருக்கும் இந்த படத்தில் முக்கியமான கேரக்டரில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் நடித்திருக்கிறார். இந்த படத்தின் டீசர் கடந்த டிசம்பர் மாதம் வெளியானது.

Also Read:6 படங்களை ரிஜெக்ட் செய்த சாய் பல்லவி.. மணிரத்தினத்துக்கே குட் பாய் சொன்ன மலர்

துருவ நட்சத்திரம்: புலி வருது, புலி வருது என மிரட்டுவது போல் துருவ நட்சத்திரம் படம் இப்ப ரிலீஸ் ஆகும், அப்ப ரிலீஸ் ஆகும் என இடியாப்ப சிக்கல் மாதிரி இழுத்துக் கொண்டுதான் போய்க்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு தடங்கல் வந்து இந்த படம் வெளியாகாமல் இருக்கிறது. இருந்தாலும் ஒரு படைப்பாளியாக துருவ நட்சத்திரம் படத்தை ரிலீஸ் செய்தே ஆக வேண்டும் என இயக்குனர் கௌதம் மேனன் உறுதியாக இருக்கிறார்.

அன்பு செல்வன்: இயக்குனர் வினோ வினோத் இயக்கத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் படம் தான் அன்புச்செல்வன். கௌதமின் பெரிய வெற்றி படமான காக்க காக்க படத்தில் பாண்டியாவுக்கு பின்னணி குரல் கொடுத்திருந்த இவர், சூர்யாவை மிரட்டும் போதெல்லாம் ஒரு வித்தியாசமான குரலில் அன்புச்செல்வன் என்று கூப்பிடுவார். இப்போது பல வருடங்கள் கழித்து அதே அன்புச்செல்வன் கௌதம் மேனன் கையில் வந்திருக்கிறது.

பசுக்கா: இயக்குனர் என்பதை தாண்டி நல்ல நடிகர் என்று அடையாளத்துடன் கௌதம் மேனன் தென்னிந்திய சினிமா ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கிறார். இந்த வரவேற்பு அவருக்கு மலையாள படத்தில் வாய்ப்பு கொடுத்திருக்கிறது. மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடித்த பசுக்கா என்னும் படத்தில் கௌதம் மேனன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

Also Read:நெப்போலியன் மிரட்டிய 5 வில்லன் கதாபாத்திரம்.. எஜமானுக்கு தண்ணீர் காட்டிய வல்லவராயன்

Trending News