1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இளையராஜா. இதுவரை 1000 பாடல்களுக்கு மேல் இசையமைத்து இருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என தென்னிந்திய சினிமாவில் முடிசூடா மன்னனாக இருக்கிறார். இவருக்கு பத்மபூஷன், பத்மவிபூஷன் போன்ற உயரிய விருதுகள் கிடைத்திருக்கின்றன.
கண்ணதாசன், வாலி, வைரமுத்து, போன்ற பாடலாசிரியர்களுடன் பணியாற்றிய ராஜா, பாரதிராஜா, எஸ். பி. முத்துராமன், மகேந்திரன், பாலு மகேந்திரா, கே. பாலச்சந்தர், மணிரத்னம், சத்யன் அந்திக்காடு, பிரியதர்சன், ஃபாசில், வம்சி, கே. விஸ்வநாத், சிங்கீதம் சீனிவாசராவ், பாலா, சங்கர் நாக், மற்றும் ஆர். பால்கி என எல்லா இந்திய இயக்குனர்களுடன் பணியாற்றி இருக்கிறார்.
Also Read: இளையராஜா அதிகமாக இசையமைத்தது இவர் படத்துக்கு தான்.. ரஜினியை மட்டும் தவிர்த்த இசைஞானி
இசைஞானி, மேஸ்ட்ரோ என அழைக்கப்படும் இளையராஜா, தமிழ் சினிமாவை தன் கைக்குள் வைத்திருந்தார் என்றே சொல்லலாம். ஹீரோக்களின் கால்ஷீட்டுகள் கூட கிடைத்து விடும். ஆனால் இளையராஜாவின் கால்ஷீட் கிடைப்பது ரொம்பவே கஷ்டம். இப்படி இவருடைய இசைதான் வேண்டும் என்று அப்போதைய இயக்குனர் ஒரு 13 பட வாய்ப்புகளை தவற விட்டிருக்கிறார்.
இயக்குனர் ஜி எம் குமார் 1986 ஆம் ஆண்டு சிவாஜி ப்ரொடக்சனில் நடிகர் பிரபுவை வைத்து அறுவடை நாள் என்னும் திரைப்படத்தை முதன் முதலில் இயக்கினார். பிரபு, பல்லவி, ராம்குமார் கணேசன், வடிவுக்கரசி, குமரி முத்து, ராஜ் கபூர் நடித்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு நல்ல விமர்சனங்களையும் பெற்றது. இதனால் ஜி வி குமாருக்கு கோலிவுட்டில் அங்கீகாரமும் கிடைத்தது.
Also Read: பாடலை மட்டுமே வைத்து ஹிட்டித்த ராமராஜனின் 4 படங்கள்.. இளையராஜா வளர்த்துவிட்ட ஹீரோ
முதல் படத்திலேயே மிகப் பெரிய வெற்றி அடைந்ததால் ஜி வி குமாரை தேடி நிறைய படவாய்ப்புகள் வர ஆரம்பித்தன. ஆனால் இவரோ தேடி வந்த தயாரிப்பாளர்களிடம் எல்லாம் தன்னுடைய படத்திற்கு இளையராஜா இசை தான் வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். இதில் இளையராஜாவை பிடிக்காத தயாரிப்பாளர்கள் நோ சொல்லிவிட்டு சென்றுவிட்டனர். இதனால் இவர் மொத்தம் 13 வாய்ப்புகளை தவறவிட்டிருக்கிறார்.
அடுத்தடுத்து படங்கள் இல்லாததால் ஜி வி குமாரின் வணிக மதிப்பு குறையவே அவர் பாரதிராஜாவின் கேப்டன் மகள் திரைப்படத்தில் நடிகராக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கிவிட்டார். இன்று இவர் வெயில், அவன் இவன் போன்ற படங்களினால் பிரபல நடிகராக இருந்தாலும், அறுவடைநாள் போன்ற ஒரு படத்தை கொடுத்த இவர் வந்த வாய்ப்புகளை பயன்படுத்தி இருந்தால் இன்று டாப் இயக்குனராக இருந்திருப்பார்.
Also Read: மதிக்காத இளையராஜாவிடம் பாக்யராஜ் பண்ணிய தாஜா.. உச்சகட்ட பொறாமையில் இசை ஞானி