தமிழ் சினிமாவில் செம ஸ்டைலிஷ் இயக்குனராக வலம் வந்து கொண்டிருந்தவர் சமீபகாலமாக எடுத்த படங்கள் எதுவுமே வெற்றி பெறாததால் நடிக்க வாய்ப்பு கேட்டு கொண்டிருக்கும் அவலம் தான் பலருக்கும் சோகத்தை கொடுத்துள்ளது.
ஒரு காலத்தில் ஸ்டைலிஸ் படங்களை எடுப்பதில் கில்லாடியாக இருந்தவர் இந்த இயக்குனர். அதுவும் போலீஸ் கதைகளை இயக்குவதில் வல்லவர். இன்று உள்ள முன்னணி நடிகர்களுக்கு அப்போதே சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார்.
அதனால் பரபரவென முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் திடீரென திக்கும் தெரியாமல் வடக்கும் தெரியாமல் திசைமாறிச் சென்று விட்டார். முன்னணி நடிகரை வைத்து அவர் எடுத்தப் படம் நான்கு வருடமாக இழுத்துக் கொண்டிருக்கிறது.
இயக்குனர் வேலையை மட்டும் பார்க்காமல் தயாரிப்பாளராக தலையை விட்டது தான் அவருக்கு மிகப்பெரிய பிரச்சினையை ஏற்படுத்தி கொடுத்து விட்டது எனவும், கோலிவுட் சினிமாவில் அவருக்கு இருந்து மரியாதை போவதற்கு காரணமும் அதுதான் எனக் கூறுகின்றனர்.
அப்படித்தான் வளர்ந்து வந்து கொண்டிருந்த இளம் இயக்குனரை வைத்து ஒரு படத்தை எடுத்துவிட்டு தற்போது வரை ரிலீஸ் செய்யாமல் இருக்கிறார். இதன் காரணமாக அந்த இளம் இயக்குனர் சமூக வலைதளங்களில் இந்த இயக்குனரை மரியாதை இல்லாமல் ஓபன் ஆகவே திட்டி வருகிறார்.
இப்படி பல்வேறு அவமானங்களைச் சந்தித்துள்ள அந்த இயக்குனர் சமீபகாலமாக நடிப்பதன் மூலம் நல்ல பெயர் வாங்கி வருகிறார். அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் ஒருவரின் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டுள்ளாராம். இதனால் இன்னும் சில வருடங்களுக்கு இயக்கத்தை ஓரம்கட்டிவிட்டு நடிச்சு சம்பாதிக்கலாம் என முடிவெடுத்துள்ளாராம்.