தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனராக, ஒரு தயாரிப்பாளராக கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு மேல் உழைத்துள்ளார் தான் வசந்த். 1990ல் கேளடி கண்மணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார், அவர் இயக்கத்தில் வெற்றி பெற்ற படங்களின் வரிசையில் தற்போது பார்க்கலாம்.
சினிமாவில் கதை எழுத ஆரம்பித்தார், கே. பாலச்சந்தரிடம் 18 படங்களுக்கு அசிஸ்டன்ட் டைரக்டராக வேலை பார்த்துள்ளார். பூவெல்லாம் கேட்டுப்பார் படத்திற்குப் பின் எந்த ஒரு படத்திலும் வெற்றி கிடைக்கவில்லை.
அதாவது தற்போது உள்ள இயக்குனர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறி வந்தார் இயக்குனர் வசந்த். அதனால் 2016 க்கு மேல் எந்த ஒரு படமும் அவர் இயக்கவில்லை என்பது சினிமாவிற்கு ஒரு இழப்புதான்.
கேளடி கண்மணி: வசந்த் இயக்கத்தில், இளையராஜா இசையில், எஸ்.பி.பி பாலசுப்ரமணியம், ராதிகா, ரமேஷ் அரவிந்த் போன்ற பிரபலங்கள் நடிப்பில் 1990ல் வெளிவந்த படம் கேளடி கண்மணி. இந்த படம் கிட்டத்தட்ட 285 நாட்கள் ஓடி, மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று சூப்பர் ஹிட் அடித்தது.
முக்கியமாக பாலசுப்ரமணியம், ராதிகா மற்றும் இந்த படத்திற்கு பாடல் வரிகளை இயற்றிய வாலி போன்றவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நீ பாதி நான் பாதி: வசந்த் இயக்கத்தில் ரஹ்மான்,கௌதமி, ஹீரா போன்ற பிரபலங்கள் நடிப்பில், 1991-ல் வெளிவந்த படம் நீ பாதி நான் பாதி. ரொமான்டிக் டிராமா கலந்த இந்த படம் கவிதாலயா தயாரித்து வெளியிட்டது. தமிழ் சினிமாவின் வெற்றி பெற்ற காதல் காவியமான படங்களில் இந்த படம் முக்கியமாக பார்க்கப்படுகிறது, மக்களிடையே மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் 100 நாட்களையும் தாண்டி தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது.
ஆசை: வசந்த் இயக்கத்தில், மணி ரத்னம் தயாரிப்பில், தேவா இசையில் அஜித்குமார், சுவலட்சுமி, பிரகாஷ்ராஜ், ரோகினி, வடிவேலு போன்ற பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்தது ஆசை. இப்படத்தில் பிரகாஷ்ராஜ் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டியிருப்பார், அதாவது மனைவியின் தங்கையை எப்படியாவது அடைந்து விடவேண்டும் என்பதற்காக தனது மனைவியை கொன்று விடுகிறார் பிரகாஷ்ராஜ்.
அவரிடமிருந்து எப்படி சுவலட்சுமி காப்பாற்றுகிறார் அஜித் குமார் என்பதுதான் கதை. மக்களிடம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், அஜித்திற்கு தமிழ்சினிமாவில் திருப்புமுனையாக அமைந்தது.
நேருக்குநேர்: மணி ரத்னம் தயாரிப்பில், விஜய், சூர்யா, சிம்ரன், கௌசல்யா போன்ற பிரபலங்கள் நடிப்பில் 1997-ல் வெளிவந்தது நேருக்கு நேர். ட்ராமா த்ரில்லர் கலந்த இந்த படம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. சூர்யா மற்றும் விஜய் இந்த படத்தில் எதிரும் புதிருமாக நடித்து இருப்பார்கள், கிளைமாக்ஸ் காட்சிகளில் இணைந்து மிக அற்புதமாக நடித்திருப்பார், இன்றளவும் இந்த படம் ரசிகர்களால் ரிப்பீட் மோடில் பார்க்கக்கூடிய படமாக இருந்து வருகிறது.
பூவெல்லாம் கேட்டுப்பார்: தமிழ் சினிமாவில் சூர்யாவிற்கு அங்கீகாரம் கிடைத்த படங்களில் இதுவும் ஒன்று என்றே கூறலாம். பஞ்சு அருணாசலம் தயாரிப்பில் சூர்யா, ஜோதிகா, நாசர், விஜயகுமார், வடிவேலு போன்ற பிரபலங்கள் நடிப்பில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளிவந்த படம்தான் பூவெல்லாம் கேட்டுப்பார். ரொமான்டிக் மற்றும் காமெடி கலந்த இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. கிட்டத்தட்ட 150 நாட்களையும் தாண்டி தியேட்டர்களில் திரையிடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.