வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்த 5 படங்கள்.. வேற மாதிரி கதை களத்தில் பின்னி விட்டார்

தமிழ் சினிமாவில் பிரபலமாக விட்டாலும் தனது திறமையான இயக்கம் மற்றும் திரைக்கதையால் இரண்டே படத்தின் மூலம் அங்கீகாரம் பெற்றவர் வசந்தபாலன். இவர் இயக்கத்தில் வெளிவந்த வெயில், அங்காடித்தெரு போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது. வசந்தபாலன் இயக்குனர் சங்கரின் சூப்பர்ஹிட் படமான ஜென்டில்மேன், காதலன், இந்தியன், ஜீன்ஸ் போன்ற பாக்ஸ் ஆபீஸ் ஹிட் படங்களில் அசிஸ்டன்ட் டைரக்டராக வேலை பார்த்துள்ளார்.

அதற்குப் பின்னர்தான் தன்னை ஒரு இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகப் படுத்தி வெற்றியும் கண்டார். இவர் இயக்கி வெளியிட்ட வெற்றி மற்றும் தோல்வி படங்களின் வரிசைகளைப் பார்க்கலாம்.

ஆல்பம்: வசந்தபாலன் 2002-ல் தனது முதல் படத்தை இயக்கத் தொடங்கினார். அரியான் ராஜேஷ், ஸ்ருதிக்கா போன்ற பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்த இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் போதுமான வரவேற்பைப் பெறவில்லை. இந்த படம் தோல்வி. அதனால் அடுத்த நான்கு வருடங்களுக்கு படம் எடுக்கவில்லையாம். மீண்டும் பீனிக்ஸ் பறவை போல வெளிவந்த படம் தான் வெயில்.

வெயில்: ஷங்கர் தயாரிப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் பரத், பசுபதி, பாவனா, பிரியங்கா போன்ற பிரபலங்கள் நடிப்பில் 2006ல் வெளிவந்த படம் வெயில். இந்த படம் 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு கிட்டதட்ட 30 கோடி வரை வசூல் செய்தது.

தமிழ் சினிமாவில் இன்றுவரை கமர்ஷியல் சக்ஸஸ் ஃபுல் படங்களில் வெயில் திரைப்படம் முக்கியமான படமாகப் பார்க்கப்படுகிறது. அண்ணன் தம்பியாக நடித்து இருப்பார்கள் பிரிந்து மீண்டும் ஒன்று சேரும் சூழ்நிலையில் பரத் இறந்து விடுகிறார்.

இதற்காக பசுபதி பழிவாங்கும் கதாபாத்திரமாக அமைக்கப்பட்டிருக்கும், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. தனது சிஷ்யர் நல்ல வர வேண்டும் என்று இயக்குனர் ஷங்கர் தயாரித்த இந்தப் படத்தை வெளியிட்டார்.

அங்காடித்தெரு: அருண்பாண்டியன் தயாரிப்பில் மகேஷ், அஞ்சலி, பாண்டி போன்ற பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்தது அங்காடி தெரு. இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி, ஜி வி பிரகாஷ் இசை அமைப்பாளர்கள் அனைத்து பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட். இந்த படம் 10 கோடி வரை பட்ஜெட் என்று அறிவித்து இருந்தனர், ஆனால் 10 கோடிக்கு என்ன செலவு என்பது தற்போது வரை புரியாத புதிர்தான்.

ஆனால் பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனையில் 30 கோடி வரை வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் அஞ்சலி மகேஷ் இருவரும் ஜவுளிக்கடையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது காதலிக்கின்றனர். அதில் வரும் பிரச்சனைகளை மிக அற்புதமாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும், அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து கதை களம் பெரும் வெற்றி பெற்றது.

இந்த படம் பல விருதுகளையும் தட்டிச் சென்றது, சென்னையின் மையப் பகுதியாக இருக்கும் டி நகர் (ரங்கநாதன் தெரு) பகுதியில் அமைக்கப்பட்டு இருக்கும்  ஜவுளிக் கடையில் நடந்த ஒரு சில உண்மை சம்பவங்களை மையமாக இந்த கதை அமைக்கப்பட்டிருந்தது.

காவியத்தலைவன்: சித்தார், பிருத்விராஜ், நாசர், வேதிகா போன்ற பிரபலங்கள் நடிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையில் 2014-ல் வெளிவந்த படம் காவியத்தலைவன். இந்த படத்தின் மொத்த பட்ஜெட் என்று பார்த்தால் 20 கோடி. இரு நடன கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து கதை அமைக்கப்பட்டு இருக்கும். கலவையான விமர்சனங்களை பெற்று மக்கள் மத்தியில் ரசிக்கும்படியாக இருந்தது. சித்தார்த் பிருத்விராஜ் நடித்திருக்கும் இந்த கதாபாத்திரம் மிக அற்புதமாக அமைக்கப்பட்டிருக்கும், ஏ ஆர் ரஹ்மானின் இசை இந்த படத்தில் முக்கியமாக பேசப்பட்டது.

அரவான்: 2012 இல் வெளியான அரவான் படம் ஒரு வரலாற்றுத் கதை. இந்த படம் வெங்கடேசன் எழுதிய நாவல். இந்த படத்தில் ஆதி கதாநாயகனாக நடித்த இப்படத்தை வசந்தபாலன் இயக்கினார். ஆனால் படம் தோல்வி அடைந்தது.

ஜெயில்: ஜி வி பிரகாஷ், அபர்னதி, ராதிகா சரத்குமார், யோகி பாபு போன்ற பிரபலங்கள் நடிப்பில் 2020-ல் வெளிவந்த படம் ஜெயில். ஒரு கைதியின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

Trending News