சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

குரலிலும், நடிப்பிலும் அச்சு அசல் ரகுவரனை போல் வளர்ந்து வரும் நடிகர்.. வெயில் பட வசந்தபாலனின் சரியான கணிப்பு

Director Vasanthabalan: தமிழ் சினிமாவிற்கு ஆல்பம், வெயில், அங்காடித்தெரு, ஜெயில் போன்ற பல அற்புதமான படங்களைக் கொடுத்த இயக்குனர் வசந்தபாலன் சமீபத்திய பேட்டி ஒன்றில், அடுத்த ரகுவரன் இவர்தான் என வளரும் இளம் நடிகரை பார்த்து அடித்துச் சொல்லி இருக்கிறார்.

ஏனென்றால் குரலிலும் சரி, நடிப்பிலும் சரி அச்சு அசல் ரகுவரனை போல் வளர்ந்து வருவதால் தமிழ் சினிமாவால் அடுத்து கொண்டாடப்படும் நடிகர் என்று கணித்திருக்கிறார். ஹீரோவாகவும் வில்லனாகவும் கோலிவுட்டை மிரட்டிய ரகுவரன் தமிழில் இருக்கும் இங்கிலீஷ் நடிகர் என்று சொல்லலாம்.

Also Read: தடுக்கி விழுந்த 5 நடிகர்களை தூக்கி விட்ட சூப்பர் ஸ்டார்.. வில்லனாய் தெறிக்கவிட்ட ரகுவரன்

ரகுவரனின் குரல் மற்றும் உருவத்தோற்றம் அப்படியே ஹாலிவுட் ஹீரோக்கள் போலவே இருக்கும். அதுமட்டுமல்ல அவர் நடித்த படங்களில் பேசிய ஒவ்வொரு டயலாக்கையும் மிகவும் அழுத்தமாக இருக்கும். இயக்குனர் வசந்தபாலன் உதவி இயக்குனராக பணிபுரிந்த போது ரகுவரனின் படங்களில் இணைந்து பணி புரியும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அப்போது அவர் சூட்டிங் ஸ்பாட்டில் சொல்லக்கூடிய ‘அவுட்’ என்று ஒத்த வார்த்தையை வித்தியாச வித்தியாசமான 25 கோணங்களில் சொல்லி வியப்பில் ஆழ்த்தியவர். அதேபோலவே புரியாத புதிர் படத்திலும் அவர் சொல்லக்கூடிய ‘ஐ நோ’ என்ற டயலாக் அந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது.

Also Read: ரகுவரன் ஹீரோவாக முத்திரை பதித்த 5 படங்கள்.. கதாபாத்திரத்திற்காக பழகிய கேடுகெட்ட பழக்கம்

அவருடைய தனித்துவமான குரல் ஆச்சரியப்படுத்தும் அளவுக்கு இருக்கும். அதேபோலவே தமிழ் சினிமா இப்போது கொண்டாட கூடிய குரல் கொண்ட இளம் வளரும் நடிகர் தான் அர்ஜுன் தாஸ். அவர் மேடையில் ‘வணக்கம்’ என்ற ஒத்த வார்த்தை சொன்னால் அங்கிருக்கும் ரசிகர்கள் ஆர்ப்பரிப்பார்கள். இவருடைய ‘லைஃப் டைம் செட்டில்மென்ட்’ என்ற டயலாக் எல்லா ரீல்ஸ்களிலும் இருக்கக்கூடிய பேமஸ் ஆன வசனம்.

அதேபோல கைதி படத்தில் ‘இவன் பேரு டெல்லி’ என்று சொல்லும்போது அர்ஜுன் தாசின் வாய்ஸ் மிகவும் பவர்ஃபுல்லாக இருக்கும். இவர் இப்போது அநீதி என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற வருகிறது. மேலும் வசந்த பாலன் சரியாக தான் கணித்திருக்கிறார் என்று ரசிகர்களும் இவருடைய பேட்டியை கேட்டு கருத்து தெரிவிக்கின்றனர்.

Also Read: வாழும் ரகுவரனாக சினிமாவுக்கு கிடைத்த ஆக்டர்.. இப்படியெல்லாம் நடிக்க முடியுமா என மிரளவிடும் நடிப்பு அரக்கன்

Trending News