கவிதாலயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த படம் அண்ணாமலை. முதலில் இந்தப் படத்தை இயக்குனர் வசந்த் இயக்குவதாக இருந்தது. மார்ச் 11, 1992 அன்று படத்தின் பூஜை போப்படுவதாக அனைத்து நாளிதழ்களிலும் செய்தி வெளியாகியது.
எதிர்பாராத விதமாக மார்ச் 8 ஆம் தேதி அன்று இயக்குனர் வசந்த் இந்த படத்தில் இருந்து விலகினார். இதனால் தயாரிப்பாளர் பாலச்சந்தர் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் இப்படத்தை இயக்கும் பொறுப்பை கொடுத்தார். படப்பிடிப்பிற்கு இரண்டே நாட்கள் இருக்கும் நிலையில், இது என்னுடைய தன்மான பிரச்சனை என்று பாலச்சந்தர் கூறியுள்ளார்.
அதற்கு ஒத்துக் கொண்ட சுரேஷ் கிருஷ்ணா இப்படத்தை மூன்றே மாதங்களில் முடித்தார். அதே ஆண்டு ஜூன் மாத இறுதியில் வெளிவந்த அண்ணாமலை படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியது. அதில் ரஜினி பேசும் வசனங்கள் தியேட்டரில் பலத்த கை தட்டலை பெற்றது.
இப்படம் தமிழை தொடர்ந்து தெலுங்கு, கன்னட மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றது. சுரேஷ் கிருஷ்ணா, ரஜினி கூட்டணியும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
இதைத்தொடர்ந்து வீரா, பாட்ஷா, பாபா போன்ற திரைப்படங்களை ரஜினியை வைத்து சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார். இதில் பாட்ஷா திரைப்படம் ரஜினிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.