செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

தமிழ் சினிமாவில் ‘A’ படங்களை அறிமுகப்படுத்திய இயக்குனர்.. சில்க் ஸ்மிதாவின் முன்னாள் காதலர்

தமிழ் சினிமாவில் சர்ச்சைக்கு பெயர் போன இயக்குனர்கள் என்று பார்த்தால் அது வேலு பிரபாகரன் என்றே கூறலாம். 90களில் ‘A’ சர்டிபிகேட் என்பதை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தி வைத்தவர் வேலு பிரபாகரன்.

சினிமா காட்சிகள் மட்டுமில்லாமல் வாழ்க்கையிலும் பல சர்ச்சைகளை சந்தித்தவர். அதாவது 52 வயதில் 27 வயது பெண்ணை கல்யாணம் செய்து கொண்டார்.  இவர் இயக்கிய வேலு பிரபாகரனின் காதல் கதை படத்திற்கு ‘A’ சர்டிபிகேட் கொடுத்தனர்.

அது மட்டுமில்லாமல் இவரின் இன்னும் சில படங்களை சென்சார் போர்டு முத்திரை குத்தி ப்ளூ ஃபிலிம் இயக்குனராக பார்க்கப்பட்டார். ஒரு காலத்தில் இவர் ப்ளூ ஃபிலிம் டைரக்டர் என்றும் சொல்லி இவரை ஒதுக்கி வைத்து விட்டனர் என்றே கூறலாம்.

இப்படி இருக்கும் பட்சத்தில் அவரது இளமைக்காலத்தில் சில்க் ஸ்மிதாவை காதலித்ததாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் அவருடன் தொடர்பில் இருந்ததாக ஒரு வீடியோவில் அவரே ஒப்புக் கொண்டுள்ளார்.

அதையும் தாண்டி காலில் விழுந்து தன்னை கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என்றும் கெஞ்சியுள்ளார் இந்த இயக்குனர். இப்படி பல சர்ச்சைகளை தாண்டி தற்போது வரை இயக்கி வருகிறார் வேலுபிரபாகரன். கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ், புரட்சிக்காரன் 2 ஆகிய படங்கள் இவர் கடைசியாக எடுத்த படம்.

velu-prabharan
velu-prabharan

Trending News