வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

GOAT டேக் லைனில் ஒளிந்திருக்கும் சூழ்ச்சி..! வெங்கட் பிரபுவின் மாஸ் ஆன சம்பவம்

Director venkat prabhu and vijay in GOAT movie tagline special: கோலிவுட்டில் என் வழி தனி வழி என வெற்றி நடை போடும் இயக்குனர் வெங்கட் பிரபு, காசுக்காக சேர்ந்த கூட்டம் அல்ல நட்பின் வழியே தானா சேர்ந்த கூட்டம் என்று பெருமை அடித்துக்கொண்டு  கதை, பாடல் என பலவற்றையும் ஆட்டைய போட்டு வித்தியாசமான  படங்களை உருவாக்குவதில் வல்லவர்.

வெங்கட் பிரபு தான் இயக்கும் ஒவ்வொரு படத்திற்கும் ஒரு டேக்லைன் போட்டு படத்தை ஹை லெவலில் பிரமோட் செய்து விடுவார். அவர் டேக்லைனில் விளைந்த படங்களில் லிஸ்ட்  இதோ,

மங்காத்தா: “வெங்கட் பிரபு கேம்” என்று கிரிக்கெட் சூதாட்டத்தை கருவாக வைத்து எடுத்த படத்தில் அஜித்தை செம மாசாக காட்டி இருந்தார் இயக்குனர். வேறு எந்த படங்களுடனும் ஒப்பிட முடியாதபடி வில்லனாக நடித்த அஜித்தை ரசிகர்கள் கொண்டாடி இருந்தனர். பின்னணி இசையிலும் தீம் மியூசிக்கிலும் யுவன் தெறிக்க விட்டிருந்தார்.

கோவா: “வெங்கட் பிரபு ஹாலிடே” என்ற டேக்லைன்யோடு கோவாவிற்கு அழைத்துச் சென்றார். வெளிநாட்டு பெண்ணை கரெக்ட் செய்து கரம் பிடிக்கும் மூன்று இளைஞர்களின் கனவாக இருந்தது இந்த கோவா. படத்தின் ஆரம்ப முதல் இறுதி வரை காமெடியில் கலக்கியிருந்தார் வெங்கட் பிரபு.

Also read: விஜய் 68 இல் நாலஞ்சு எக்ஸ்ட்ரா பிட்டுகளை சேர்த்து போட்ட விஜய்.. வசமாக சிக்கி கொண்ட வெங்கட் பிரபு

சென்னை 28: கிரிக்கெட் பற்றிய படம் என்றதும் முதலில் நினைவுக்கு வருவது சென்னை 28 தான். அந்த அளவுக்கு தெருக்களில் சின்ன பசங்க விளையாடும் கிரிக்கெட்டிலிருந்து ஆரம்பித்து இளைஞர்கள் வெறித்தனமாக மோதிக் கொள்ளும் ஆட்டம் வரை  காமெடியுடனும் திரில்லிங்காகவும் ரசிகர்களை ஆட்டி வைத்தார் இயக்குனர். “வெங்கட் பிரபு சிக்ஸர்” என ஒரே பாலில் சிக்சர் அடிச்ச மாதிரி அறிமுகமான படத்திலேயே வசூலை வாரி குவித்தார்.

மாநாடு: அரசியல் பிளஸ் டைம் லூப் என வித்தியாசமாக யோசித்த வெங்கட் பிரபுவுக்கு ஒரு சபாஷ் போடலாம். இந்த மனிதர் இப்படியும் யோசிப்பாரா என்று ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தார். “வெங்கட் பிரபு அரசியல்” என டேக்லைன்னோடு வெளிவந்த மாநாடு வெற்றி பெற்றதுடன் வசூலிலும் சக்கை போடு போட்டது.

GOAT: விஜய் உடன் வெங்கட் பிரபு இணைந்திருக்கும் படம் கோட். சமீபத்தில் இப்படத்திற்கான பர்ஸ்ட் லுக்  மற்றும் செகண்ட் லுக் வெளியிடப்பட்டது. சயின்ஸ் பிக்சன் மற்றும் ஆக்சன் திரில்லர் ஆன இப்படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடந்து வருகிறது.

vijay 68-first look

தளபதி விஜய் இரு வேடங்களில் உள்ள படத்தின் போஸ்டரை பார்த்த உடனேயே ரசிகர்கள் ஆர்வத்தில் பொங்கி உள்ளனர். “வெங்கட் பிரபு ஹீரோ” என்ற டேக்லைன்னுடன் வந்திருக்கும் போஸ்டரில் ஒருவர் ஹீரோ ஒருவர் வில்லனாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் ஒரு ஃபேமஸ் அறிஞரின் வாசகத்தையும் இணைத்துள்ளது படத்தின் எதிர்பார்ப்பை மேலும் கூட்டி இருக்கிறது.  ஒளி ஆனது இருளை அழிக்கலாம் ஆனால் ஒருபோதும் இருள் ஒளியை ஆக்கிரமிக்க முடியாது என்ற வரிகள் ஒரு நாயகனின் தரமான வில்லத்தனம் மற்றும் சூழ்ச்சியை விளக்குகிறது. மற்றொன்று வில்லனிடமிருந்து காப்பாற்றும் மற்றும் புதிரை விடுவிக்கும் நாயகனின் ஹீரோயிசத்தையும் எடுத்தாள்கிறது இந்த கோட்.

Also read: புட்டியை தொட்டதால் கெட்டு போன நடிகர்.. வெங்கட் பிரபு டீம்மை கலைத்த தளபதி

Trending News