புதன்கிழமை, அக்டோபர் 30, 2024

வெற்றிமாறனை பார்த்து ஆரம்பத்தில் நிராகரித்த நடிகர்கள்.. பத்து வருஷம் சினிமாக்காக தியாகம் செய்த இருவர்

Director VetriMaaran’s Success history in real life and reel life: சினிமா என்னும் ஊடகம் மூலமாக தனது படைப்பை எந்த ஒரு சமரசமும் செய்யாது ரசிகர்களிடையே கொண்டு போய் சேர்ப்பதில் வெற்றியாளர் இந்த வெற்றிமாறன். இவரின் படங்கள் பேசுவதோடு மட்டுமல்லாமல் படத்தின் கதாபாத்திரங்களையும் மனதில் நிலைக்க வைக்கும் திறமை இவருக்கு.

வெற்றிமாறன் பார்ப்பதற்கு ஆள் ஒரு மாதிரியா பச்சை தமிழன் போல் முரட்டுத்தனமாக இருந்தாலும் இங்கிலீஷில் பட்டையை கிளப்புவார். ஆங்கிலத்தில் இவரை மாதிரி பேசுவதில் தமிழில் இயக்குனர்கள் யாரும் இல்லை எனலாம். வெற்றிமாறன் தாயார் ஒரு ஆங்கில டீச்சர் இதனால் இவருக்கு சர்வ சாதாரணமாக ஆங்கிலம் வரும். அம்மாவை பிஎச்டி படிக்க வைத்து அம்மாவின் ஆசையை நிறைவேற்றியதும் வெற்றிமாறனே!

ஆரம்பத்தில் இவர் தோற்றத்தை பார்த்து இவருக்கு படம் பண்ணுவதற்கு நிறைய ஹீரோக்கள் யோசித்துள்ளனர். அதன் பின் தான் முதல் படத்தில் ஒரு பைக்கை வைத்து தனுஷ்க்கு பொல்லாதவன் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார். பேட்டி ஒன்றில் உங்களது படங்களில் அதிக தேர்வாக தனுஷ் மட்டுமே இருக்கிறாரே எப்படி என கேட்டதற்கு? அவர் மட்டும்தான் கதை கேட்காமல் நடிப்பாரு என்று தனுஷ் தன்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை தோழமையுடன் பகிர்ந்தார் வெற்றிமாறன்.

Also read:  தலைக்கு மேல வெள்ளமே போனாலும் அமீர் இல்லாம வாடிவாசல் இல்ல.. வெயிட்டான ரோல் கொடுத்திருக்கும் வெற்றிமாறன்

திரைக்கு வருவதற்கு முன்பாக தனது ஆஸ்தான குரு பாலுமகேந்திராவிடம் சன் டிவியில் ஒளிபரப்பான கதை நேரம் நிகழ்ச்சியில் உதவி இயக்குனராகவும் காதல் வைரஸ் திரைப்படத்தில் கதிரின் உதவி இயக்குனராகவும் பணி புரிந்திருந்தார் வெற்றிமாறன்.

படங்களின் எண்ணிக்கை என்பது வெறும் எண்கள் தான், குறைவான படங்கள் இயக்கி இருந்தாலும் அதுஎன் பெயர் சொல்லும் படமாக இருக்க வேண்டும் என்று விரும்பும் வெற்றிமாறன் ஆடுகளம்,விசாரணை திரைப்படத்திற்காக தேசிய விருதை பெற்றுள்ளார்.  தன்னால் வியக்கப்பட்ட ஒருவர் தனது படைப்பை பார்த்து “என்னால் தூங்க முடியவில்லை!” என்று கூறிய தருணம் விசாரணை படத்தை பார்த்த ஆஸ்கார்  கேம்பைன்னில் உள்ள ஒருவரின் கூற்று.  அந்த தருணம் வெற்றிமாறனின் வெற்றித்தருணமானது.

அமைதியான சுபாவம் கொண்ட வெற்றிமாறனின் வெற்றிக்கு பக்க பலமாக இருப்பவர் மனைவி ஆர்த்தி. இவர்கள் இருவரும் கல்லூரி காலத்திலேயே காதல் செய்து வெற்றியின் வெற்றிக்காக பத்தாண்டு காலம் காத்திருந்து பொல்லாதவன் படத்திற்குபின் திருமணம் செய்து  மகள் பூந்தென்றலுடனும் மகன் கதிரவனுடனும் வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

Also read: டபுள் மடங்கு சம்பளத்தை உயர்த்திய தனுஷ்.. தலையில் துண்டை போடும் நிலைமையில் தயாரிப்பாளர்கள்

- Advertisement -spot_img

Trending News