ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

அவசர கல்யாணத்தின் பின்னணி.. லேட் தான் இருந்தாலும் திடீர் ஜெட் வேகம் காட்டும் நயன்தாரா

கடந்த  2015 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்தபோது நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது. இவருக்கு முன்பே நயன்தாரா, சிம்பு மற்றும் பிரபுதேவா உடன் காதல் வயப்பட்ட நிலையில், விக்னேஷ் சிவத்தையும் கழட்டி விடுவார் என நினைத்தனர்.

ஆனால் அப்படி எதுவும் நடக்காமல் கடந்த 6 ஆண்டுகளாக இருவரும் தீவிரமாக காதலித்து வருகின்றனர். எனவே இந்த காதல் ஜோடி நிச்சயம் திருமணத்தில் முடியும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் கல்யாணத்தை பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர் பட்டாளத்திற்கு நல்ல செய்தி சொல்லும் விதமாக கல்யாணத்தை அறிவித்தனர்.

அவர்களது கல்யாணம் வருகிற ஜூன் 9ஆம் தேதி திருப்பதியில் நடக்கிறது. அப்பாடா இப்பவாவது கல்யாணம் செய்யப் போகிறார்கள் என்று ரசிகர்களை உச்சி கொட்டி வருகின்றனர். நயன்தாராவிற்கு வயது 38, விக்னேஷ் சிவனிற்கு வயது 37.  இவர்கள் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்தனர்.

அவ்வபோது இவர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதும், அங்கு எடுக்கும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு ரசிகர்களையும் குஷிப்படுத்தி கொண்டிருந்தனர். இப்பொழுது திடீரென்று கல்யாணத்திற்கு அவசரப்பட்டு தேதியை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதற்கு காரணம் நயன்தாரா ஹிந்தி பக்கம் செல்லவிருக்கிறார். பாலிவுட்டில் நிறைய படங்கள் நடிக்கவிருக்கிறார். அங்கே சென்று விட்டாள் எப்படியும் இன்னும் 2-3 ஆண்டுகள் ஒரு ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் தான் கல்யாணம் செய்துக் கொண்டு அங்கேயே செட்டில் ஆகிவிடலாம் என்ற ஒரு திட்டம் போட்டு இருக்கிறார்.

ஆகையால் இந்த சமயத்தை விட்டால் திருமணம் இன்னும் தள்ளிப்போகும் என்பதற்காக வேகவேகமாக திருமண ஏற்பாடுகளை திருப்பதியில் செய்துகொண்டிருக்கின்றனர். இதற்காகவே மட்டும் ஒரே வாரத்தில் இரண்டு முறை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருப்பதிக்கு சென்று அங்கு நடக்கும் திருமண ஏற்பாடுகளை பார்வையிடுகின்றனர்.

Trending News