செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ஐஸ்வர்யா ராயுடன் அந்த மாதிரி வேண்டவே வேண்டாம்.. அஜித்துக்காக மொத்தமாக கதையவே மாற்றும் விக்கி

இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்த துணிவு திரைப்படம் பொங்கல் கொண்டாட்டமாக ரிலீஸ் ஆகி வெற்றி நடை போட்டு வருகிறது. அஜித்தின் முந்தைய படம் வலிமையை ஒப்பிடும்போது இந்த துணிவு திரைப்படம் ரசிகர்களிடையே நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அஜித் ரசிகர்கள் இந்த படத்தை திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர்.

துணிவு திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே நடிகர் அஜித்தின் 62 ஆவது படத்தின் அப்டேட் வெளியானது. இயக்குனர் விக்னேஷ் சிவன் இந்த படத்தை இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வா அறிவிப்புகளும் வெளியாகின. இந்த படத்திற்கு தற்போது தற்காலிகமாக ஏகே 62 என பெயரிடப்பட்டுள்ளது.

Also Read: 100 கோடி கிளப்பில் இணைந்த துணிவு.. தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் செய்த உண்மையான வசூல் விவரம்

இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பார், த்ரிஷா நடிப்பார் என அவ்வப்போது தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது பாலிவுட்டின் முன்னணி ஹீரோயினாக இருந்த நடிகை ஐஸ்வர்யா ராய் அஜித்துக்கு ஜோடியாக நடிப்பது உறுதியாகி இருக்கிறது.

நடிகர் அஜித்தை பொறுத்தவரை சமீப காலமாகவே கதாநாயகிகளுடன் அதிகமான ரொமான்ஸ் காட்சிகள் மற்றும் காதல் காட்சிகள் வேண்டாம் என்று மறுத்து நடித்துக் கொண்டிருக்கிறார். அதையே ஏகே 62 படத்திலும் கடைப்பிடிக்க இருக்கிறார். இதை ரொம்பவும் திட்டவட்டமாக நடிகர் அஜித் விக்னேஷ் சிவனிடம் சொல்லிவிட்டாராம்.

Also Read: துணிவு படம் பார்க்க சென்று உயிரிழந்த ரசிகர்.. அஜித் செய்யாததை செய்து காட்டிய வாரிசு நடிகர்

இதனால் நடிகர் அஜித்தின் நிபந்தனைக்கு ஏற்ப இயக்குனர் விக்னேஷ் சிவன் கதையில் ஒரு சில மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறாராம். அதாவது ஏகே 62 படத்தில் நடிகர் அஜித் இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவாக நடிக்க இருக்கிறார். மேலும் இந்த படம் குடும்பப் பின்னணி கொண்ட டான் கதை அம்சம் உள்ள திரைப்படமாக உருவாக இருக்கிறது.

வழக்கம்போல விக்னேஷ் சிவன் பானியில் எதார்த்தமாக உருவான இந்த கதை தற்பொழுது ஐஸ்வர்யா ராய், அரவிந்த்சாமி போன்ற நட்சத்திரங்கள் உள்ளே வர பிரம்மாண்டமாக உருவாக இருப்பது நன்றாகவே தெரிகிறது. மேலும் இனி நடித்தால் கதாநாயகன் தான் என்று முடிவெடுத்த சந்தானம் கூட இந்த படத்திற்கு 60 நாள் கால்ஷீட் ஒதுக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Also Read: ஒரு வாரம் கழித்து வாரிசுக்கு ஆட்டம் காட்டிய துணிவு.. ஆட்டநாயகனாக முன்னேறிய அஜித்

Trending News