ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

விக்ரமன் இயக்கத்தில் ஹிட்டான 5 படங்கள்.. தல, தளபதிக்கு ஹிட்டு கொடுத்திருக்காரு

கூட்டுக்குடும்பம், உறவுகளின் மகத்துவம், சென்டிமென்ட் என எல்லா பரிமாணங்களையும் கொண்ட திரைப்படங்களாக இருக்கும் இயக்குனர் விக்ரமனின் படம். இவர் இயக்குனராக அறிமுகமாகிய புது வசந்தம் திரைப்படம் முதல் பிரியமானவள் தோழி வரை எல்லா படங்களும் எவர்கிரீன் ஆக இருக்கும்.

பூவே உனக்காக: ஆர் பி சௌத்ரி தயாரிப்பில் விக்ரமன் இயக்கிய படம் பூவே உனக்காக. இப்படத்தில் விஜய், சங்கீதா, எம் என் நம்பியார், நாகேஷ், சார்லி என பலரும் நடித்திருந்தார்கள். இப்படத்தில் கௌரவப் கதாபாத்திரத்தில் முரளி நடித்திருந்தார். இப்படத்தில் எஸ் ஏ ராஜ்குமார் இசையமைத்த அனைத்து பாடல்களுமே மிகப் பெரிய ஹிட்டானது. விஜய், ஒருதலையாக காதலித்த பெண்ணின் காதலுக்காக இரு குடும்பங்களை சேர்த்துவைக்க முயற்சித்து கடைசியில் வெற்றி பெற்று அவர்களை சேர்த்து வைப்பார். இப்படம் விஜய்க்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

poove-unakaga-cinemapettai
poove-unakaga-cinemapettai

சூரிய வம்சம்: விக்ரமன் படங்களில் சரித்திரம் படைத்த படம் சூரிய வம்சம். எல்லா தரப்பு மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. சரத்குமார், ராதிகா, தேவயானி என பலரும் நடித்த இத்திரைப்படம் காலம் கடந்து பேசப்படுகிறது. இப்படத்தில் சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். ஒரு பாடலில் பணக்காரன் ஆவது எப்படி என உதாரணமாக இப்போதும் பலர் இப்படத்தை கூறுவார்கள். விக்ரமன் படங்களிலேயே பொக்கிஷமான படம் சூரிய வம்சம். வணிக ரீதியாக படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்: விக்ரமன் இயக்கத்தில் 1998 இல் வெளியான திரைப்படம் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன். இப்படத்தில் கார்த்திக், ரோஜா, மௌலி, ரமேஷ் கண்ணா என பலரும் நடித்திருந்தார்கள். இப்படத்தில் கெஸ்ட் ரோலில் அஜீத் நடித்திருந்தார். இப்படத்தில் திருடனான கார்த்திக், தன்னால் பாதிக்கப்பட்ட ரோஜாவிற்கு அடைக்கலம் தந்து, அவரின் பாடகி கனவு நிறைவேற்றுவார். இப்படம் வெற்றி பெறுவதற்கு படத்தில் உள்ள பாடல்களும் முக்கிய காரணம். இப்படத்திற்கு எஸ் ஏ ராஜ்குமார் இசையமைத்திருந்தார்.

unnidathil-ennai-koduthen
unnidathil-ennai-koduthen

வானத்தைப் போல: ரவிச்சந்திரன் தயாரிப்பில் விக்ரமன் இயக்கத்தில் 2000ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் வானத்தைப்போல. இப்படத்தில் விஜயகாந்த், பிரபுதேவா, லிவிங்ஸ்டன், மீனா, கௌசல்யா என பலரும் நடித்திருந்தார்கள். இப்படத்தில் விஜயகாந்த் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் தம்பிகளுக்காக திருமணம் செய்துகொள்ளாத அண்ணனாக விஜயகாந்த் நடித்திருந்தார். இப்படத்திற்கு எஸ் ஏ ராஜ்குமார் இசையமைத்திருந்தார்.

உன்னை நினைத்து: 2002ல் விக்ரமன் இயக்கத்தில் சூர்யா, சினேகா, லைலா நடித்து வெளியான திரைப்படம் உன்னை நினைத்தேன். சூர்யாவை ஒரு நல்ல நடிகராக நமக்கு அடையாளம் காட்டியது இப்படம் தான். சூர்யா, தன் காதலித்த பெண் காதலை ஏற்காத போதும் அவரை டாக்டருக்கு படிக்க வைப்பார். இப்படத்தில் உள்ள அனைத்து பாடல்களுமே ஹிட் ஆனது. இப்படத்திற்கு சிற்பி இசையமைத்திருந்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

Trending News