ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

இரண்டு வருடமாக காத்திருக்கும் இயக்குனர்.. காலை வாரிவிட்ட பிரபல நடிகர்

பெரிய முதலாளி வீட்டிற்குச் சென்ற முன்னாள் இயக்குனர் ஒருவருக்கு அந்த நிகழ்ச்சி முடிந்ததும் ஒரு பட வாய்ப்பு தருவதாக அந்த முன்னணி நடிகர் கூறியிருந்தது இரண்டு வருடம் ஆகியும் அந்த படத்தை பற்றிய எந்த ஒரு அறிவிப்பும் இல்லாததால் இயக்குனர் வருத்தத்தில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

மகள் காதல் பிரச்சினையில் நந்து போனவர்தான் அந்த இயக்குனர். தமிழ் சினிமாவில் தடம் பதிக்கும் சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துள்ளார். சென்டிமெண்ட் காட்சிகள் மிகவும் வலியுடன் மக்கள் மனதில் புகுத்துவதில் திறமை வாய்ந்தவர் இந்த இயக்குனர்.

ஆனால் சமீபகாலமாக இந்த இயக்குனரின் படங்கள் எதுவுமே பெரிய அளவு ரசிகர்களை கவரவில்லை. அதுமட்டுமில்லாமல் இந்த இயக்குனரின் படங்கள் மிகவும் மெதுவாக நகர்ந்து செல்வதாக பல வருடங்களாக குற்றங்கள் இருந்து வருகின்றன. இருந்தாலும் தற்போது வரை அதை அந்த இயக்குனர் மாற்றிக் கொள்ளவில்லை.

பட வாய்ப்பு இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த நேரத்தில் அந்த இயக்குனரின் மகள் காதல் பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. இதனால் நொந்து போன அந்த இயக்குனர் அதிலிருந்து மீண்டுவர பெரிய முதலாளி வீட்டை தேர்வு செய்தார்.

உள்ளே சென்றதும் மற்றவர்களைப்போல் மக்களிடம் கெட்ட பெயர் எடுத்துக் கொள்ளாமல் நல்ல பெயருடன் வெளியில் வந்தார். அந்த இயக்குனருக்கு செல்வமான நடிகர் பட வாய்ப்பு தருவதாக தெரிவித்து இருந்தார். அதையும் அந்த இயக்குனர் ஓபன் ஆகவே அந்த பெரிய முதலாளி வீட்டில் தெரிவித்தார்.

என்றும் இல்லாத திருநாளாக அந்த இயக்குனரின் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் கிளம்பிய நிலையில் இரண்டு வருடமாக அந்த படத்தை பற்றிய எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் இருக்கிறது. அதற்கு காரணம் அந்த நடிகரும் தானம். வருடம் முழுவதும் படம் நடித்தாலும் இந்த இயக்குனருக்கு படவாய்ப்பு தருவதில் தாமதத்தை ஏற்படுத்தி வருகிறாராம்.

இதனால் நொந்து போன அந்த இயக்குனர் சரி கொஞ்ச நாள் சினிமாவில் ஏதாவது சப்போர்ட்டிங் கேரக்டர் கிடைத்தால் நடிக்கலாம் என முடிவு செய்து அதற்கான கதைகளை கேட்டு வருகிறாராம். அந்த நடிகருக்கு இந்த இயக்குனருடன் சேர்வதில் பெரிய அளவு விருப்பம் இல்லை என்பதை சொல்லாமல் இழுத்தடிப்பது இயக்குனருக்கு மனவேதனையை கொடுத்துள்ளதாம்.

- Advertisement -

Trending News