வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

விஜய்க்காக காத்திருக்கும் ரகடான இயக்குனர்.. லோகேஷை ஓவர்டேக் செய்ய தயாராகும் ஸ்கிரிப்ட்

Actor Vijay: தற்போது விஜய் நடிக்கும் படங்களுக்கான பிசினஸ் வேற லெவலில் உயர்ந்து கொண்டிருக்கிறது. இவர் ஒரு படத்திற்கு பூஜை போட்டு விட்டார் என்றாலே அந்தப் படத்தை வாங்குவதற்கு பலரும் நீ நான் என போட்டி போட்டுக் கொண்டு வருகிறார்கள்.

அதனாலயே இவரை இயக்க வேண்டும் என்ற ஆசை இப்போது இருக்கும் இயக்குனர்களுக்கு இருக்கிறது. அந்த வகையில் லோகேஷ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபுவுடன் இணைய இருக்கிறார். இது குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது.

Also read: ராசி இல்லாத நடிகை என முத்திரை குத்தப்பட்ட த்ரிஷா.. விஜய் படத்தால் வந்த மறுவாழ்வு

இந்த நிலையில் விஜய்யுடன் இணைந்தே தீருவேன் என்று வெற்றிமாறன் ஒரு மேடையில் வெளிப்படையாக கூறி இருக்கிறார். எதார்த்தமான படைப்புகளுக்கு பெயர் போன இவர் சமீபத்தில் விடுதலை படத்தை இயக்கியிருந்தார். அதன் இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் நடைபெற்று வரும் சூழலில் வாடிவாசல் படத்திற்கான முன்னேற்பாடுகளும் நடந்து வருகிறது.

பல மாதங்களுக்கு முன்பே சூர்யாவுடன் இவர் இணையும் இப்பட அறிவிப்பு வெளிவந்தாலும் படத்தை தொடங்கும் நேரம் இப்போதுதான் வந்திருக்கிறது. விரைவில் ஆரம்பிக்கப்பட இருக்கும் இப்படத்தை அடுத்து தனுஷ் நடிக்கும் வடசென்னை 2 படத்துக்கான வேலைகளும் ஆரம்பமாக இருக்கிறது.

Also read: அப்பாவின் மேல் இருக்கும் கோபத்தை படத்தில் காட்டிய விஜய்.. தளபதி நடிப்பை மோசமாக விளாசிய இயக்குனர்

இதை அடுத்து விஜய் படத்தில் நிச்சயம் இணைவேன் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் லியோ படத்தை பற்றிய பேச்சு சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கும் நிலையில் லோகேஷை ஓவர் டேக் செய்யும் வகையில் ஒரு ஸ்கிரிப்ட்டையும் வெற்றிமாறன் யோசித்து வைத்திருக்கிறாராம்.

ஆனால் கையிருப்பில் இருக்கும் படங்களை முடித்துவிட்டு விஜய்க்காகவே நேரம் ஒதுக்கி ஸ்கிரிப்ட்டை பக்காவாக தயார் செய்யவும் முடிவு செய்திருக்கிறார் இந்த ரகடான இயக்குனர். ஏற்கனவே விஜய் இவருக்கு ஓகே சொல்லி இருக்கும் நிலையில் வெற்றிமாறனும் அதை உறுதிப்படுத்தி இருப்பது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

Also read: விஜய் சேதுபதி மார்க்கெட்டை பிடிப்பதற்கு எடுத்த அஸ்திவாரம்.. இந்த விஷயத்தில் கோட்டை விட்ட 80ஸ் ஹீரோ

Trending News