வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஊழலை பற்றி விஜய் பேசலாமா.? வருமான வரி கதையை அவிழ்த்து விட்ட சர்ச்சை இயக்குனர்

Vijay: விஜய் எப்போது அரசியலுக்கு வருவார் என எதிர்பார்த்த நிலையில் தற்போது அவர் தன்னுடைய கட்சியின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். அந்த அறிக்கையில் அவர் பல விஷயங்களை குறிப்பிட்டு இருந்தாலும் ஊழல் பற்றிய ஒரு செய்தியையும் அடிக்கோடிட்டு இருந்தார்.

மதவாதம் மற்றும் ஊழலை எதிர்க்க போவதாக அவர் தெரிவித்திருந்தார். தற்போது அவருடைய கூற்றுக்கு சமீபகாலமாக சர்ச்சையில் சிக்கிய இயக்குனர் அமீர் பல கேள்விகளை முன் வைத்துள்ளார். அதாவது ஊழல் மதவாதம் இரண்டையும் ஒரே தட்டில் பார்ப்பதே முதலில் தவறு தான். ஊழலை சட்டத்தின் மூலம் தூக்கி விடலாம்.

ஆனால் மதவாதம் வளர்ந்தால் சர்வாதிகாரம் அதிகரிக்கும். அதனால் ஊழலை விட மதவாதம் தான் அதிக ஆபத்தானது. இன்று அரசியல் கட்சி தொடங்கியிருக்கும் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு ஒரு காரை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தார். அப்போது அதிகாரிகள் அதற்கு வரி கட்ட சொன்ன போது விஜய் வரி அதிகமாக இருப்பதாக கூறி கட்ட மறுக்கிறார்.

Also read: விஜய், அஜித் மோதும் கடைசி படம்.. மாஸ்டர் பிளான் போட்டு காய் நகர்த்தும் AK

மேலும் அந்தக் காரை உபயோகப்படுத்தாமல் தன் வீட்டிலேயே பல வருடங்கள் நிறுத்தி வைக்கிறார். ஒரு கட்டத்தில் வணிக அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்திய போது நான் அதை பயன்படுத்தவில்லை அதனால் வரி கட்டவில்லை என்று கூறுகிறார். இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்றபோது நீதிபதி விஜய்யிடம் பல கேள்விகளை கேட்கிறார்.

உங்களைப் போன்ற ஹீரோக்கள் நிஜ வாழ்விலும் ஹீரோவாக இருக்க வேண்டும். நீங்கள் கட்டும் வரி வறுமையில் இருக்கும் மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுகிறது என்று கூறி அபராத தொகையை விதித்தார். அதேபோன்று பிகில் படத்தின் போது நடந்த வருமான வரி துறையில் விஜய் 5 கோடிக்கு வரி கட்டாதது தெரிய வருகிறது.

விசாரித்ததில் புலி படத்திற்காக வாங்கிய சம்பளம் தான் அது என தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து 5 ஆண்டுகளாக அவர் சரியாக வருமான வரி தாக்கல் செய்யாததும் கண்டுபிடிக்கப்படுகிறது. இதற்கெல்லாம் அபராதம் போடப்பட்டு விஜய்யும் அதை கட்டி இருக்கிறார்.

Also read: விஜய்யுடன் போட்டி போட தயங்கிய உதயநிதி.. வைரலாகும் பதிவு

இதையெல்லாம் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். விஜய் ஊழலை பற்றி பேசி இருப்பதால் இதை சொல்ல வேண்டியதாக இருக்கிறது. ஒரு தலைவனுக்கு இது அழகல்ல. அதேபோல் மதவாதம் பற்றி பேசி இருக்கும் விஜய் 2024 தேர்தலில் போட்டியிட்டு இருக்க வேண்டும். அவர் அதை செய்யாமல் மௌனமாக இருப்பது ஏன் என அமீர் சரமாரி கேள்விகளை கேட்டுள்ளார்.

Trending News