வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

வாரிசு நடிகை மீது அப்படி என்ன கரிசனம்.? உச்ச நடிகரிடம் சிபாரிசுக்கு நிற்கும் இயக்குனர்

உச்ச நடிகர் தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருக்கிறார். தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படத்தை அடுத்து இளம் இயக்குனருடன் அவர் கைகோர்க்க இருக்கிறார்.

இதை ஒட்டு மொத்த மீடியாவும் ஆர்வத்துடன் கவனித்து வருகிறது. மறுபக்கம் படத்தில் நடிக்கப் போகும் நட்சத்திரங்களின் தேர்வும் நடைபெற்று வருகிறது.

அதில் பல வருடங்களாக உச்ச நடிகருடன் இணைய மாட்டேன் என சபதம் எடுத்திருந்த நடிகர் இப்போது ஓகே சொல்லி இருக்கிறாராம். அதே போல் வாரிசு நடிகையும் நடிப்பதற்கு 100% வாய்ப்புகள் இருக்கிறதாம்.

சமீபகாலமாகவே இயக்குனரின் பெயர் இந்த நடிகையோடு சேர்த்து கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. அதை எல்லாம் அவர் கண்டுகொள்ளவில்லை என்றாலும் தற்போது இந்த விவகாரம் நிச்சயம் பூதாகரமாக வெடிக்கும்.

ஏனென்றால் இயக்குனர் தான் நடிகையை உச்ச நடிகரிடம் சிபாரிசு செய்து இருக்கிறார். நடிகரும் நட்புக்காக இதற்கு சம்மதித்து இருக்கிறார்.

விரைவில் படத்தின் மாஸ் அப்டேட் வர இருக்கும் நிலையில் அனைத்து சந்தேகங்களும் தீர்ந்துவிடும் என்கிறது திரையுலக வட்டாரம். இருந்தாலும் இயக்குனர் இப்படியெல்லாம் மாறி இருப்பது ஆச்சரியம் தான்.

Trending News