வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

விஜய்க்காக போர்க்கொடி தூக்கிய சீமான்.. என்ன காரணம் தெரியுமா.?

விஜய்யின் ரோல்ஸ்ராய்ஸ் கார் தான் இரண்டு நாட்களாக ட்ரெண்டிங் நியூஸ். அவர் தனது ரோல்ஸ் ராய்ஸ் காரின் நுழைவு வரியை குறைக்க சொல்லி தொடர்ந்த வழக்கில், வரி என்பது பங்களிப்பு, அது நன்கொடையல்ல அதை இரண்டு வாரத்தில் கட்டுமாறு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இது கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளத்தில் வைரலாகி, விஜய்க்கு ஆதரவாகவும், எதிராகவும் பல கருத்துக்கள் வந்தன. தற்போது விஜய்க்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைவர் திரு சீமான் அவர்கள் அறிக்கை ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் விஜய் அவர்கள் 2012ஆம் ஆண்டு வெளிநாட்டிலிருந்து வாங்கிய சொகுசு காருக்குச் செலுத்த வேண்டிய நுழைவு வரியிலிருந்து விலக்குக் கேட்டு தான் வழக்கு தொடர்ந்தார். தற்போது அதற்காக அவருக்கு நீதிமன்றத்தில் வரி கட்டச் சொல்லி வந்தது தீர்ப்பு தானே தவிர, வரி ஏய்ப்புச் செய்து விட்டார் என்பதல்ல.

Vijay-Cinemapettai-3.jpg
Vijay-Cinemapettai-3.jpg

மேலும் சீமான் அவர்கள் விஜய் ஒழுங்காக வரி கட்டும் பண்பாளர். அவரை அரசியல் நோக்கத்தோடு அச்சுறுத்தி பார்ப்பது வேடிக்கையான ஒன்று என்றும், இந்தியாவில் வரி கட்டாமல் தப்பி வெளிநாட்டிற்கு ஓடியவர்களை என்ன செய்தார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.

அதனையெல்லாம் கண்டும் காணாது போல இருந்து, அச்செயல்பாடுகளை மறைமுகமாக ஆதரித்துவிட்டு, தற்போது விஜய்யின் வரிவிலக்குச் சலுகை கோரும் வழக்குக்கு எதிராகப் பொங்கித் தீர்ப்பது என்பது நியாயமான ஒன்று அல்ல என்று விஜய்க்கு ஆதரவாக பேசியுள்ளார்.

Trending News