ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ஹரி, லிங்குசாமி பட தோல்விக்கு இதான் முக்கிய காரணம்.. பல கோடி போட்டு விழிபிதுங்கும் தயாரிப்பாளர்கள்

தமிழ் சினிமாவில் கமர்ஷியல் படங்களை இயக்கியதன் மூலம் பெயர் போன இயக்குனர் ஹரி மற்றும் லிங்குசாமி இருவரும் ஒரு காலத்தில் டாப் இயக்குனர்களின் லிஸ்டில் இருந்தனர். இப்பவும் மவுசு குறையாமல் இருக்கும் இருவருக்கும் அடுத்தடுத்து படங்களை இயக்குவதற்கான வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

பல வருடங்களுக்குப் பிறகு லிங்குசாமி இயக்கத்தில் தெலுங்கு பிரபலங்களான ராம் பொத்தினேனி, கீர்த்தி ஷெட்டி இணைந்து நடித்து கடந்த ஜூலை 14-ஆம் தேதி வெளியான தி வாரியர் திரைப்படம், புல்லட் பாடலால் ரிலீஸுக்கு முன்பே பிரபலமானது.

Also Read: இயக்குனர் லிங்குசாமி அதிரடி கைது

கூடுதல் எதிர்பார்ப்புடன் திரையரங்கில் படத்தைப் பார்க்க சென்ற ரசிகர்கள் படத்தைப் பார்த்த பிறகு, 10 வருடங்களுக்கு முன்பு லிங்குசாமி இயக்கிய வேட்டை படத்தில் ஆர்யா, மாதவன் அண்ணன் தம்பியாக நடித்த படத்தில் தம்பியை நீக்கிவிட்டு மாதவன் கேரக்டரை மட்டும் கொஞ்சம் மாற்றி எடுத்து, இந்தப்படத்திலும் ரசிகர்களை மோசம் செய்தார்.

70 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படத்தின் வசூல் 36 கோடியை தாண்டவில்லை. லிங்குசாமி இயக்கத்தில் ஏற்கனவே வெளியான ஜி, அஞ்சான், வேட்டை சண்டக்கோழி 2 போன்ற படங்களை போலவே தி வாரியர் படமும் அவரது தோல்வி படமாகவே மாறியது.

Also Read: லிங்குசாமியை அடுத்து விழி பிதுங்கி நிற்கும் வெங்கட்பிரபு

இதைப்போன்று 20 வருடங்களாக தமிழ் சினிமாவில் குடும்ப சென்டிமென்ட் கலந்த படங்களை எடுப்பதில் கில்லாடியான இயக்குனர் ஹரி இயக்கத்தில், அருண் விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் யானை திரைப்படம் ஜூலை 1 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது.

யானை படத்தில் ஏற்கனவே ஹரி இயக்கத்தில் வெளியான வேல், வேங்கை, கோவில் போன்ற படங்களின் தாக்கம் தெளிவாகத் தெரிகிறது. இதனால் பழைய காட்சிகள் அனைத்தும் கண்முன்னே வந்து சென்றது.

Also Read: அரைத்த மாவையே அரைத்துக் பிரஷ்ஷாக கொடுத்த ஹரி

இப்படி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களாக இருக்கும் லிங்குசாமி மற்றும் ஹரி இருவரும் தற்போது எடுக்கும் படங்களில் அவர்களுடைய பழைய சாயலில் இருந்து வெளிய வர முடியாமல் எல்லா படங்களிலும் ஒரே மாதிரியாகவே எடுக்கின்றனர்.

இதற்கு ஒரே வழி அவர்கள் வெளியில் இருந்து கதையை வாங்கி இயக்கினால் ரசிகர்களுக்கு பிடித்த வித்தியாசமான படங்களைக் கொடுக்க வாய்ப்பிருக்கிறது. இதை மட்டும் செய்தால் இவர்களது அடுத்தடுத்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் கொடுக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

Trending News