வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

இன்று நடப்பதை அன்றே கணித்த இயக்குனர்கள்.. உண்மை சம்பவத்தை மையப்படுத்திய 4 படங்கள்

நம் வாழ்வில் சிலருக்கு வாழ்வில் நடக்கக் கூடிய சில விஷயங்கள் உள்ளுணர்வின் மூலம் முன்பே தெரியும். அதுபோல் தமிழ் சினிமாவில் சில இயக்குனர்கள் பின்னால் நடக்கும் விஷயங்களை தன் திரைப்படத்தில் முன்பே காட்டியுள்ளனர்.

அன்பே சிவம் – 2003 ஆம் ஆண்டு வெளிவந்த அன்பே சிவம் திரைப்படம் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் கமல் அவர்களால் திரைக்கதை எழுதப்பட்டது. இந்தப் படத்தின் ஒரு காட்சியில் கமல் மற்றும் மாதவன் இருவரும் ஒரு ஹோட்டலில் தங்குவது போல் அமைக்கப்பட்டிருக்கும். அப்பொழுது கமல் சுனாமியால் ஏற்படும் விளைவுகளை பற்றி பேசுவார்.

இந்த திரைப்படம் வெளியாகி மறு வருடம் அதாவது 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26 அன்று சென்னை உட்பட பல பகுதிகளில் சுனாமி அலை தாக்கியது. இன்றளவும் நம்மால் மறக்க முடியாத சம்பவமாக இது உள்ளது.

தசாவதாரம் – 2008 ஆம் ஆண்டு நடிகர் கமலின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தசாவதாரம். இது எபோலா வைரஸ் என்ற வார்த்தையை கமல் பயன்படுத்தியிருப்பார். அப்பொழுது நமக்கு இது முற்றிலும் புதியதான ஒரு வார்த்தையாக இருந்தது.

dasavatharam
dasavatharam

2014ஆம் ஆண்டு இந்த வைரஸ் இந்தியாவில் பல பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதை கமல் அவர்கள் தன் படத்தில் முன்கூட்டியே தெரிவித்தது ஆச்சரியமான ஒன்றாக உள்ளது.

பிச்சைக்காரன் – 2016 ஆம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த திரைப்படம் பிச்சைக்காரன். இந்த திரைப்படத்தில் ஒரு காட்சியில் பிச்சைக்காரர் ஒருவர் 500 மற்றும் 1000 நோட்டுகளை தடை செய்தால் ஊழலை ஒழிக்க முடியும் என்று கூறுவார். மார்ச் மாத தொடக்கத்தில் பிச்சைக்காரன் படம்  வெளியாகி வெற்றி பெற்றது.

அதே ஆண்டு நவம்பர் மாதம் பிரதமர் மோடி அவர்களால் இந்தியா முழுவதும் 500 மற்றும் 1000 நோட்டுகள் தடை செய்யப்பட்டது. இதனால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளானார்கள்.

ஏழாம் அறிவு – 2011 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் அவர்கள் இயக்கிய திரைப்படம் ஏழாம் அறிவு. இந்த திரைப்படத்தில் சீனாவில் இருந்து உருவாகும் வைரஸ் இந்தியாவில் பரவுவது போல் கதை இருக்கும். அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை பற்றி விரிவாக இந்தப் படத்தில் காட்டப்பட்டிருக்கும்.

2020ஆம் ஆண்டு தொடக்கத்தில் நம் இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளையே புரட்டிப்போட்ட வைரஸ் கொரோனா. பல உயிர்களை காவு வாங்கிய இந்த வைரஸிடம் இருந்து இன்று வரை நாம் தப்ப முடியாமல் இருக்கிறோம் . இப்படி ஒரு நிகழ்வை தன் படத்தில் ஏ ஆர் முருகதாஸ் அவர்கள் பல வருடங்களுக்கு முன்பே காட்டியிருப்பார்.

china-corona
china-corona

Trending News