ஒரு நாடக நடிகராக மேடை ஏறியவர் பேசும் வசனம், தெளிவானஉச்சரிப்பாலும் பிரமிப்பூட்டும் நடிப்பு திறமையினால், இவர் ஏற்று நடித்த சிவாஜி கதாபாத்திரத்தின் மூலமாக மிகவும் பிரபலம் அடைந்து ரசிகர்களால் ‘சிவாஜி கணேசன்’ என்று புகழப்பட்டார். பின்பு சினிமாவின் அடையாளமாகவே மாறிய இவர், தமிழில் மட்டும் 250 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்த பெருமைக்குரியவர்.
மேலும் சிவாஜியின் நடிப்பு, மற்ற நடிகர்களை விட தனித்துவம் மிகுந்ததாகவும் அவருடைய உடல் மொழி மட்டுமன்றி அவரது கண், புருவம், நெற்றி, மூக்கு, கன்னம்,உதடு என அனைத்துமே நடிக்கும். இப்படி நடிப்பில் ஜாம்பவானாக இருக்கும் சிவாஜிக்கு திரைப்பட உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதையும், பத்மஸ்ரீ, பத்மபூஷன் மட்டுமின்றி செவாலியர் விருதைப் பெற்ற முதல் நடிகராகவும் திகழ்ந்தார்.
இப்படிப்பட்ட பெருமைக்குரிய நடிகர் திலகம் சிவாஜி படத்தில் மட்டும் இல்லை நிஜ வாழ்விலும் தங்கமான மனிதராம். எனவே செவாலியர் சிவாஜி கணேசனுக்கும் அவருடைய காலகட்டத்தில் ஒன்றாக சேர்ந்து நடித்த ஒரு நடிகருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை சிவாஜி எப்படி கையாண்டுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
யாருடனாவது கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் அதை நீண்ட நாட்கள் போகாமல் பார்த்துக் கொள்வாராம். ஏதாவது சந்தர்ப்பத்தில் அவர்களிடம் மீண்டும் பழைய நட்பை உருவாக்கிக் கொள்வாராம். பழைய கருத்து வேறுபாடு மன சங்கடத்தை மனதில் வைத்துக்கொள்ளாமல் நட்பை புதுப்பித்து விடுவார்.
அப்படி ஒரு படத்தில் தேங்காய் ஸ்ரீனிவாசன் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் மனக்கசப்பில் இருந்துள்ளனர். அதன் பின்னர் 1987ஆம் ஆண்டு கே விஜயன் இயக்கத்தில் வெளிவந்த ‘கிருஷ்ணன் வந்தான்’ என்ற படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றி அந்த கருத்து வேறுபாடை தகர்த்து உள்ளார்.
இந்தப் படத்தை தேங்காய் ஸ்ரீனிவாசன் தயாரித்ததால் அவருக்காகவே சிவாஜி கணேசன் குறைந்த சம்பளத்தை மட்டுமே பெற்றுக் கொண்டு நடித்துக் கொடுத்துள்ளார். இவர் கல்மனம் என்ற படத்தில் தேங்காய் வியாபாரியாக நடித்ததன் மூலம், தேங்காய் ஸ்ரீனிவாசன் என பரவலாக அறியப்பட்ட இவர், நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் தமிழில் மட்டும் சுமார் 900 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.