ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

சிபிசிஐடி வேலை பார்த்தும் சல்லி காசுக்கு பிரயோஜனம் இல்ல.. பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகளுக்கு கிடைத்த ஏமாற்றம்

Pandian Stores: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் இப்போது விறுவிறுப்பான கதை களத்துடன் சென்று கொண்டிருக்கிறது. அதாவது ஜனார்த்தனனை கத்தியால் குத்திவிட்டு அந்தப் பழியை சாமர்த்தியமாக கதிர் மற்றும் ஜீவா மீது பிரசாந்த் போட்டுவிட்டு தப்பித்துவிட்டார். இதனால் மீனாவும் தனது கொழுந்தன் மீது கடுகோபத்தில் இருந்தார்.

ஆனால் மருத்துவமனையில் பிரசாந்த் நடவடிக்கை மீது சந்தேகப்பட்ட மீனா உடனடியாக இருந்த விஷயத்தை மூர்த்தி இடம் கூறிவிட்டார். மேலும் பிரசாந்த் தான் உண்மையான குற்றவாளி அவனை எப்படியாவது மாட்டிவிட வேண்டும் என்று சிபிசிஐடி அளவுக்கு வேலை பார்த்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் மொத்த குடும்பமும். அதாவது ஜனார்த்தனையை கொல்ல பிரசாந்த் இரவு மருத்துவமனைக்கு வந்திருந்தார்.

Also Read : மாமனாரை தொடர்ந்து மீனாவின் உயிருக்கு குறி வைக்கும் சைக்கோ.. தப்புக்கு மேல் தப்பு பண்றீங்க

அப்போது அவருக்கு தெரியாமல் மொபைல் போனை மறைத்து வைத்திருந்தனர். இதனால் பிரசாந்த் தனது வாயால் எல்லா உண்மையும் ஜனார்த்தனன் முன்பு பேசி விடுகிறார். மேலும் மூர்த்தி கையும் களவுமாக பிரசாந்தை பிடித்து விடுகிறார். மீனாவும் தனது பங்குக்கு பிரசாந்த் லெப்ட் அண்ட் ரைட் வாங்கி விடுகிறார்.

ஆனால் கடைசியில் மூர்த்தியை தள்ளிவிட்டு விட்டு பிரசாந்த் எஸ்கேப் ஆகி விடுகிறார். இதைத்தொடர்ந்து போன் ஆதாரத்தை வைத்துக் கொண்டு போலீசாரிடம் மூர்த்தி மற்றும் மீனா செல்கிறார்கள். இந்த ஆதாரத்தை வைத்து எப்படியும் ஜீவா மற்றும் கதிரை வெளியே கொண்டு வந்து விடலாம் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

Also Read : விஜய் டிவி மானமே உங்க கையில தான் இருக்கு.. 18 போட்டியர்களின் சம்பள விவரத்தை கசிய விட்ட பிக்பாஸ்

ஆனால் இந்த ஒரு போன் ஆதாரத்தை வைத்து இருவரையும் வெளியே விட முடியாது என நீதிமன்றம் உத்தரவிட்டு விடுகிறது. இதனால் சிபிசிஐடி வேலை பார்த்தும் சல்லி காசுக்கு பிரயோஜனம் இல்லாமல் போய்விட்டது. மேலும் பிரசாந்தை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிடுகின்றனர்.

மற்றொருபுறம் பிரசாந்த் போட்டி படுக்கை எல்லாம் கட்டிக்கொண்டு வெளியே கிளம்புகிறார். எங்கே போகிறாய் என்று கேட்கும்போது கோபத்துடன் பேசிவிட்டு பிரசாந்த் வெளியே வரும்போது போலீசார் அவரை பிடித்து விடுகின்றனர். இதனால் இப்போது உண்மை வெளிச்சத்திற்கு வர ஜீவா மற்றும் கதிர் வெளியே வர இருக்கின்றனர்.

Also Read : டிஆர்பி-யில் முதல் 6 இடத்தை கெட்டியாக பிடித்த சீரியல்கள்.. எதிர்நீச்சலை பின்னுக்கு தள்ளி முதல் இடத்துக்கு வந்த சிங்கப்பெண்

Trending News