Actor Rajinikanth: நடிகர்கள் மற்றும் நடிகைகள் தயாரிப்பாளர்களுக்கு அல்லது இயக்குனர்களுக்கு படம் எடுப்பதில் ஏதாவது ஒரு வகையில் தொந்தரவு கொடுத்தால் அவர்களுக்கு ரெட் கார்டு கொடுக்கப்படும். முதலில் அந்தந்த சங்கங்களில் புகார் அளிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து சரியான பதில் வரவில்லை என்றாலே இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். நடிகர் சிம்புவுக்கு ரெட் கார்டு கொடுக்கும் நிலை வரும் பொழுது தான் சினிமாவில் இப்படி ஒன்று இருக்கிறது என்றே நிறைய பேருக்கு தெரியும்.
சமீபத்தில் கூட நடிகர்கள் விஷால், சிம்பு மற்றும் நடிகைகள் அமலாபால் மற்றும் லட்சுமி ராய் மீது தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து இதுபோன்ற புகார்கள் இருந்தது. இது போன்ற பிரச்சனைகளை எல்லாம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு முன்பே சந்தித்திருக்கிறார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா. 1993 ஆம் வருடத்தில் ரஜினி இதுபோன்ற பிரச்சனையை சமாளித்து வந்திருக்கிறார்.
90களின் காலகட்டம் என்பது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பயங்கர பிசியாக இருந்த நேரம். ஏவிஎம், சத்யஜோதி பிலிம்ஸ், தேவர் பிலிம்ஸ் போன்ற தயாரிப்பு நிறுவனங்களுக்கு தொடர்ந்து படம் நடித்துக் கொடுத்துக் கொண்டிருந்தார். நிற்க கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருந்த ரஜினியின் சம்பளமும் அப்போது மற்ற நடிகர்களை ஒப்பிடும் பொழுது அதிகமாக இருந்திருக்கிறது.
ஒரு கட்டத்தில் தயாரிப்பாளர்களின் செலவை குறைப்பதற்காக நடிகர்கள் தங்களுடைய சம்பளங்களை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த விநியோகஸ்தர் ஒருவர் ஹீரோக்களில் அதிக சம்பளம் வாங்கும் ரஜினிகாந்த் அவருடைய சம்பளத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் எனவும், இல்லையென்றால் அவருடைய படங்களை வாங்கி விற்க மாட்டோம் எனவும் கோரிக்கை வைத்திருக்கிறார்.
முதலில் இந்த முடிவுக்கு ரஜினிகாந்த் சம்மதம் தெரிவிக்க வில்லையாம். இதனால் ரஜினியின் படங்களை இனிமேல் வாங்கி விற்கக் கூடாது என அவருக்கு ரெட் கார்டு போடப்பட்டிருக்கிறது. அப்போது விநியோகஸ்தர் சங்கத் தலைவராக இருந்தா மறைந்த சிந்தாமணி முருகேசன் இதைப்பற்றி ரஜினியிடம் மீண்டும் கோரிக்கையாக வைத்திருக்கிறார். ரஜினியும் தன்னுடைய சம்பளத்தை குறைத்துக் கொள்ள ஒப்புக்கொண்டாராம்.
அதன்பின்னர் ரஜினியின் மீது போடப்பட்டிருந்த ரெட் கார்டும் விலகிக் கொள்ளப்பட்டதாம். இப்போது ரொம்ப அமைதியாக இருக்கும் ரஜினிகாந்த், தன்னுடைய இளமை காலத்தில் செய்யாத அடாவடி வேலைகளே இல்லை என்று சொல்லலாம். விநியோகஸ்தர்கள் ரெட் கார்டு போட்ட பொழுது இவரை நிறைய ஏரியாக்களில் தன்னுடைய உழைப்பாளி திரைப்படத்தை வாங்கி விநியோகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read:சிவகார்த்திகேயன் ரஜினி மாதிரியெல்லாம் இல்ல, ரஜினியே தான்.. மிஷ்கின் பேச்சுக்கு ப்ளூ சட்டை பதில்