வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

டைவர்ஸ் பொண்டாட்டிக்கு செக் வைத்த நடிகர்.. இனி உள்ளயே விட மாட்டாராம்

சினிமாவைப் பொறுத்தவரை நடிகர் நடிகைகள் அவசரஅவசரமாக ஆசையில் காதலித்து திருமணம் செய்து கொள்வதும் அடுத்த சில வருடங்களிலேயே ஆசையிலிருந்து விவாகரத்து பெற்று சென்று விடுவதும் வாடிக்கையாகிவிட்டது. கேட்டால் கருத்து வேறுபாடு என்று கூறி விடுகிறார்கள். திருமணத்திற்கு பிறகு மனைவி நடிக்க கூடாது என்பது நடிகர்களின் எண்ணமாக உள்ளது. அதேபோல் நீங்க நடிக்கிற அப்போ நாங்க நடிச்சா தப்பு என்ன தப்பு என்பது நடிகைகளின் வாக்குவாதம்.

இப்படிப்பட்ட பஞ்சாயத்தில் தான் சமீபத்தில் ஒரு விவாகரத்து நடந்தது. அக்கட தேசத்தில் அந்த நடிகரின் குடும்பம் பெரிய மரியாதை மிக்க குடும்பமாக இருக்கிறது. அந்த குடும்பத்தை பொறுத்த வரையில் திருமணம் செய்துவிட்டால் படத்தில் நடிக்க கூடாது என்பது கட்டளை. அப்படித்தான் அந்த குடும்பத்தின் தலைவரான முன்னணி நடிகர் ஒருவர் தன்னுடைய மனைவியை கிட்டத்தட்ட முப்பது வருட ஆண்டு காலமாக படங்களில் நடிக்காமல் வீட்டுக்குள்ளேயே முடக்கி விட்டார்.

அதையே தான் தன்னுடைய மருமகளுக்கும் செய்ய பார்த்திருக்கிறார். மருமகளும் சும்மா சொல்லக்கூடாது திருமணத்திற்கு பிறகு கொஞ்சமாவது அடக்க ஒடுக்கமாக நடித்து இருக்க வேண்டும். ஆனால் திருமணத்திற்குப் பிறகுதான் அநியாயத்துக்கு நெருக்கமான காட்சிகளில் நடித்து அனைவரையும் பதற வைத்தார். பார்க்கும் நமக்கே அப்படி இருக்கும்போது கட்டிய கணவருக்கு இருக்காதா என்ன.

இது குறித்து பேசிய போதுதான் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி கடைசியில் இது செட் ஆகாது என பிரிந்துவிட்டனர். பிரிந்த பிறகு அந்த நடிகை தொடர்ந்து தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் ஏதாவது ஒரு கருத்து சொல்கிறேன் என பழைய வாழ்க்கையை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் நீண்டகால நாட்களாகவே அந்த நடிகர் மௌனம் காத்து வருவது எதற்கு என்ற காரணம் தெரிய வந்துள்ளது.

தற்போது அந்த நடிகைக்கு பாலிவுட் சினிமாவில் ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறதாம். ஆனால் அக்கட தேசத்தில் ஒரு பட வாய்ப்பு கூட இல்லை. அதற்கு காரணம் தனக்கு நெருக்கமான இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் சொல்லி அந்த நடிகைக்கு பட வாய்ப்பு தர வேண்டாம் எனவும் அவரை எப்படியாவது தெலுங்கு சினிமாவை விட்டு விரட்டி அடித்து விட வேண்டும் என்பதிலும் தெளிவாக இருந்து சரியாக காய் நகர்த்தி வருகிறாராம்.

Trending News