பாய்ஸ், ஆயுத எழுத்து என பல படங்களில் நடித்துள்ளவர் சித்தார்த், இவருக்கு சித்தா படம் தான் பிரேக் கொடுத்தது.
சித்தார்த் நடிப்பில், ராஜசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மிஸ் யூ.
இது காதல்–காமெடி கலந்த படமாக உருவாகியுள்ளது. இதில், ஆஷிகா ரங்க நாத், பாலா சரவணன், லொள்ளு சபா மாரன், கருணாகரன் நடித்துள்ளனர்.
8 மைல்ஸ் பர் செகண்ட் ஸ்டுடியோஸ் படக்குழு தயாரித்துள்ளது. ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இப்படம் நவம்பர் 29 ஆம் தேதி ரிலீஸ் என அறிவித்திருந்த நிலையில், ஃபெஞ்சல் புயலால் ரிலீஸ் தள்ளிப்போனது. பின்னர் டிசம்பர் 13 ஆம் தேதி ரிலீஸாகிறது. இப்பட த்திற்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இப்பட புரமோசன் பணி நடந்து வருகிறது. பிரஸ்மிட்டில், செலிபிரிட்டிகளின் லைஃபில் தொடர்ந்து டைவர்ஸ் பிரச்சனை வருகிறதே. மிஸ் யூ படத்தில் அதுபற்றி சீன் இருக்கா? என கேட்கப்பட்டது.
’’இந்தப் படத்தில் ரிலெசேசன் ஷிப் பிரச்சனைகள் தொடர்பான காட்சிகள் உள்ளன என்றார். மேலும், நிறைய டைவோர்ஸ் டைவோர்ஸ்னு போகுது ,என் வாழ்க்கையில் மட்டும் கல்யாணம், கல்யாணம்ன்னு போகுது. செய்தியாளர்களுக்கு நன்றி.
சில நாள்கள் பேப்பரை பார்க்காமல் இருந்தால், நல்லா இருப்பேன்னு நினைக்கிறேன். படத்தைப் பற்றி நல்லா எழுதினால் தான் ரசிகர்கள் தியேட்டருக்கு வருவார்கள்”’ என்று கூறினார்.
மேக்னா நாராயணனை திருமணம் செய்து விவாகரத்து செய்த நிலையில், 2024 ல் அதிதி ராவை காதலித்து திருமணம் செய்தார். அதிதிராவுக்கு இது 2 வது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.