திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

ஐஸ்வர்யா ராய் உடன் விவாகரத்தா? நடிகையுடன் தொடர்பா? மனம் திறந்த அபிஷேக் பச்சன்

பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சன். இவர் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமானாலும் தன் திறமையால் முன்னணி நடிகராக உயர்ந்தார். தூம், குரு, ராவணன் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்து தன் திறமையை நிரூபித்திருந்தார்.

இதையடுத்து, கடந்தாண்டு அவர் நடிப்பில் கோமர் படம் வெளியானது. சமீபத்தில் அவர் நடிப்பில் ஐ வாண்ட் டூ டால்க் படம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. சினிமாவைத் தாண்டி வெப் சீரிசிலும் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.

தக்லைஃப் படத்துக்குப் பின் மணிரத்னம் ஒரு புதிய படத்தை இயக்கவிருப்பதாகவும் இதில், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் இருவரும் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. இதுகுறித்த அதிகார்ப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

இந்த நிலையில், தனது மனைவி ஐஸ்வர்யா ராயுடன் விவாகரத்து, தஸ்வி படத்தில் நடித்த பெண் நடிகையுடன் தொடர்பு, குறிப்பாக, ஐஸ்வர்யா ராய் திருமண மோதிரத்தை அணியவில்லை, தனது மாமியாருடன் கருத்து வேறுபாடு தனது மகள் ஆராத்யா பிறந்த நாளில் அபிஷேக் பங்கேற்கவில்லை, உள்ளிட்ட பல்வேறு வதந்திகள் அவரைப் பற்றி மீடியாவில் வெளியானது. இதுவரை எந்த விளக்கமும் இருவருமே அளிக்காமல் இருந்தனர்.

இதுகுறித்து அபிஷேக் பச்சன் கூறியதாவது:

இந்த நிலையில், அபிஷேக் பச்சன் பிரபல சேனலுக்குப் பேட்டியளித்துள்ளார். அதில், ’’என்னைப் பற்றி பல வதந்திகளும், எதிர்மறை விமர்சனங்களும் உள்ளன. இதில் நான் கவனம் செலுத்தினால் அவை என்னை மூழ்கடித்துவிடும்.

நான் ரொம்ப நேர்மையானவனாக இருக்கிறேன் இதை எவராலும் மாற்ற முடியாது. என் மீது கூறப்படும் புகார்களுக்கு நான் காதுகொடுக்க விரும்பவில்லை. நம்பிக்கையுடன் இருந்தால் கடினமாக சூழலில் இருந்து மீளலாம். நான் அடிப்படி இருப்பதால் நான் திடமான நபர் என்பது விமர்சனங்களால் தளரவில்லை என்பது மற்றவர்களுக்குத் தெரியும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

மெளனம் கலைப்பாரா ஐஸ்வர்யா ராய்?

17 ஆண்டு கால திருமண வாழ்க்கையில் இருந்து பிரியப் போவதாக ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் பற்றிய வதந்திகள் பரவி வரும் நிலையில், அபிஷேக் முதன்முதலாக இதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். அதேபோல் விரைவில் ஐஸ்வர்யா ராயும் விளக்கம் கொடுத்து இவ்வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பாரா என கேள்வி எழுந்துள்ளது.

Trending News