தமிழ், தெலுங்கு சினிமாவில் பிசியாக நடித்துவருபவர் நடிகை சமந்தா. கடைசியாக இவர் நடிப்பில் தெலுங்கில் ஜானு என்ற படம் வெளியானது. இது தமிழில் வெளியான ’96’ படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து 2017ல் திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்குப் பின் நாக சைதன்யாவின் குடும்பப்பெயரான அக்கினேனி என்பதை தனது பெயருக்குப் பின்னால் சேர்த்துக்கொண்டார் சமந்தா. ஆனால், சில தினங்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் இருந்து தன் பெயருக்குப் பின்னால் இருந்த அக்கினேனி என்ற பெயரை நீக்கி பெயரை எஸ்(s) என மாற்றி வைத்துக்கொண்டார்.
மேலும், சில தினங்களுக்கு முன்னர் பேசிய இவர், தான் கொஞ்சநாள் சினிமாவிலிருந்து விலகியிருக்க முடிவுசெய்துள்ளதாக கூறினார். இதற்கும், விவாகரத்துக்கு சம்பந்தப்படுத்தி ஏராளமான செய்திகள் சமூக வலைத்தளத்தில் பரவத்தொடங்கின. இதுபற்றி தெலுங்கு மீடியாக்களும், பெரிய குடும்பத்து மருமகளான நடிகை விவாகரத்து பெறப்போவதாகவும் கூறினர்.
இந்நிலையில், சமந்தா தன் பெயரை மாற்றியது தான் நடித்து வரும் சாகுந்தலம் என்ற படத்தின் ப்ரமோஷனுக்காகதான் என கூறப்பட்டது. சமீபத்தில் விவாகரத்து பிரச்னை குறித்து பேசியுள்ள சமந்தா, ஒரு சர்ச்சையை நான் எப்போது பேச விரும்புகிறேனோ அப்போதுதான் பேசுவேன், மக்கள் கேட்கும்போதெல்லாம் பேச மாட்டேன்.
இதைப்பற்றி நான் பேச விரும்பவில்லை. எல்லோருக்கும் எப்படி கருத்து சுதந்திரம் உள்ளதோ, அதேபோல் எனக்கும் கருத்து சுதந்திரம் உள்ளது’ என்றார்.
தற்போது சமந்தா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் இணைந்து ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார் சமந்தா. இறுதி கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.