தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் மூலம் தமிழ் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவர் திவ்யதர்ஷினி. அதுவும் விஜய் டிவியில் ஒளிபரப்பான காபி வித் டிடி நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். தனது துரு துரு பேச்சாலும், சேட்டைகளும் தனக்கான ரசிகர்களிடம் தனி இடத்தை பிடித்தார்.
விஜய் தொலைக்காட்சியில் இருக்கும் பிரபலங்கள் அனைவருக்கும் காலப்போக்கில் ஏதாவது கிசுகிசுக்கள் வருவது வழக்கம் அப்படி ஒரு சமயத்தில் டிடி பற்றி பல கிசுகிசுக்கள் வந்தன. அது மட்டுமில்லாமல் தனது நண்பரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஓரிரு ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்றதால் அதன் பிறகு சமூக வலைதளங்களில் இவருடைய விஷயங்கள் பேசும் பொருளாக மாறின.
ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தற்போது நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் கூட பிரபல சேனல் ஒன்றிற்கு விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு பங்கேற்றார். ரசிகர்களை பொருத்தவரை டிடி ஒரு தொகுப்பாளர் என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆனால் இவர் பல வருடங்களுக்கு முன்பே மற்றொரு சேனல் சீரியல் ஒன்றில் நடித்துள்ளார். அது பலருக்கும் தெரியாது. சன் டிவியில் ஒளிபரப்பான செல்வி என்னும் சீரியலில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சிலர் தொகுப்பாளராக கொடிகட்டி பறந்த திவ்யதர்ஷினிக்கு சமீபகாலமாக நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்க வாய்ப்பு வராததால் முன்புபோலவே விரைவில் சீரியலில் நடிக்க வந்து விடுவார் என கூறி வருகின்றனர்.