திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

தீபாவளிக்கு டிஆர்பி-ஐ அடித்து நொறுக்க புது படங்களை இறக்கும் 4 சேனல்கள்.. எத பாக்குறது, எத விடுறதுன்னு தெரியல

Diwali Special Movies List: இந்த வருஷம் தீபாவளிக்கு தியேட்டரில் என்ன படம் ரிலீஸ் ஆகிறது என்ற ஆர்வத்தை விட டிவியில் போடும் படங்களின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகி விட்டது. ஏற்கனவே கடந்த சில மாதங்களாக சீரியல்களில் டிஆர்பிக்காக அடித்துக் கொண்டிருந்த ஐந்து சேனல்கள் இந்த தீபாவளி அன்று டிஆர்பிஎல் முதலிடம் வந்து விட வேண்டும் என சூப்பர் ஹிட் படங்களை இறக்கி இருக்கிறார்கள். அந்த படங்களின் லிஸ்ட்டை பார்க்கலாம்.

சன் டிவி: தீபாவளியன்று டிஆர்பியில் முதலிடத்தில் வந்து விட வேண்டும் என சன் டிவி முழுமூச்சாக இறங்கிவிட்டது. யாருமே எதிர்பார்க்காத வகையில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தை போட இருக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்தின் மூலம் ஏற்கனவே வசூலை அள்ளி விட்டதால், படம் ரிலீஸ் ஆகி இரண்டே மாதத்தில் டிவிக்கு வந்துவிட்டது.

விஜய் டிவி: விஜய் டிவியில் ஏற்கனவே தீபாவளி அன்று கலகலப்பான நிகழ்ச்சிகளுக்கு பஞ்சம் இருக்காது. அதையும் தாண்டி சின்ன பட்ஜெட்டில் வெளியாகி கோடிக்கணக்கில் வசூலித்த போர் தொழில் படத்தை போட இருக்கிறார்கள். அதே போன்று விஜய் ஆண்டனி நடித்த சமீபத்தில் ரிலீசான பிச்சைக்காரன் 2 படமும் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது.

கலைஞர் டிவி: டிஆர்பிக்கும் நமக்கும் சம்பந்தமே இல்லை என எப்போதுமே கலைஞர் டிவி ஒதுங்கி தான் இருந்து வருகிறது. ஆனால் இந்த தீபாவளி அன்று அந்த சேனலும் போட்டியில் களம் இறங்குகிறது. நடிகர் அஜித்குமார் நடித்து போன வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகி பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த துணிவு படத்தை ஒளிபரப்பாக இருக்கிறது.

ஜீ டிவி: முன்னணி சேனல்களான சன் டிவி மற்றும் விஜய் டிவியுடன் தீபாவளிக்கு போட்டியாக ஜீ தமிழும் இறங்குகிறது. இந்த வருடத்தில் ரிலீஸ் ஆகி அதிக அளவில் வரவேற்பை பெற்ற மார்க் ஆண்டனி படத்தை போட இருக்கிறார்கள். இந்த படத்திற்கு எந்த அளவுக்கு தியேட்டரில் ரெஸ்பான்ஸ் இருந்தது அதைவிட பல மடங்கு தீபாவளி அன்று சின்னத்திரையில் இருக்கும்.

சில வருடங்களுக்கு முன்பு வரை தீபாவளி பொங்கல் போன்ற விழாக்களின் போது சின்னத்திரையில் ஓடும் படங்களுக்கு மக்களிடையே அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இப்போது டெக்னாலஜி அதிகமாக வளர்ந்து விட்ட காலகட்டத்தில் சின்னத்திரையில் போடும் படங்கள் மீது அதிக ஆர்வம் இல்லாமல் இருந்தது. ஆனால் இந்த தீபாவளிக்கு மேற்கண்ட நான்கு சேனல்களும் தேர்ந்தெடுத்து இருக்கும் படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் என்பதால் சின்னத்திரை ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கிறது.

Trending News