கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ஈரோட்டில் கிழக்கு தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவேரா திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி சார்பாக நின்று வெற்றி பெற்றார். ஆனால் எதிர்பாராத விதமாக திருமுருகன் ஈவேரா ஜனவரி 4ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார்.
இதனால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் கேஎஸ் தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தேதிமுக சார்பில் ஆனந்த் ஆகியோர் வேட்பாளராக களம் இறங்கினார்கள். கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
Also Read : ஜெயலலிதா தோற்க காரணமான சூப்பர் ஸ்டார்.. அந்த வார்த்தையால் ஆட்டம் கண்ட அதிமுக
மேலும் மார்ச் 2 ஆம் தேதியான இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி ஆளும் கட்சியான திமுக கைவசம் மீண்டும் செல்லுமா, இல்லை 2016 இல் இந்த தொகுதியை கைப்பற்றிய கே எஸ் தென்னரசு வெற்றி பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு ஈரோடு மக்கள் மத்தியில் இருந்து வந்தது.
அதன்படி முதலில் தபால் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னணி வகித்து வந்தார். மேலும் தொடர்ந்து காங்கிரஸ் முன்னிலை வகித்து வந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியை ஈவிகேஎஸ் இளங்கோவன் தன் வசப்படுத்தி உள்ளது.
Also Read : குணசேகரனை அவமானப்படுத்திய ஜான்சி ராணி.. எதிர்நீச்சலில் கரிகாலனை அந்தரத்தில் விட்ட ஆதிரா
அதன்படி ஈவிகேஎஸ் இளங்கோவன் 15 சுற்றுகளின் வாக்கு எண்ணிக்கை முடிவில், 1,10,556 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். மேலும் அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,981 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார். தென்னரசை விட 66,575 வாக்குகள் அதிகம் ஈவிகேஎஸ் இளங்கோவன் பெற்றுள்ளார்.
மேலும் நாம் தமிழர் கட்சி சீமான் 7,984 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார். கடைசியாக தேதிமுக கட்சி 1,115 வாக்குகள் பெற்று நான்காவது இடத்தை பெற்றுள்ளது. மேலும் 77 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் திமுக மற்றும் அதிமுகவைத் தவிர மற்ற 75 வேட்பாளர்களும் டெபாசிட்டை இழந்துள்ளனர். ஈவிகேஎஸ் இளங்கோவன் தனது மகன் கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளை காட்டிலும் அதிக வாக்கு பெற்று ஈரோட்டில் வெற்றி கண்டுள்ளார்.
Also Read : இந்த ஆண்டு தொடக்கத்திலேயே பாக்ஸ் ஆபிஸை மிரட்டி விட்ட 5 படங்கள்.. பாலிவுட்டை தூக்கி நிறுத்திய பதான்