வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

தவேக-வை மொத்தமா காலி பண்ண பாக்குறாங்க.. உளவு துறை வைத்து திமுக நகர்த்தும் காய்

உளவு துறை மூலமாக தவேக கட்சியை ஒழிக்க திமுக திட்டம் தீட்டி இருப்பதாக சமீப நாட்களாக பேச பட்டு வருகிறது. விஜய் கட்சி ஆரம்பிக்கப்போகிறேன் என்று சொன்ன நாள் முதலே பஞ்சாயத்து தான். அவரை தொடர்ந்து விமர்சனம் செய்பவர்கள் ஒருபுறம் என்றால், மறுபுறம், அவரை ஒழித்து கட்ட ஒரு கூட்டமே கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறது.

பொதுவாக அனைத்து கட்சிகளுமே உளவு துறை வைத்திருப்பார்கள். அந்த துறை மூலமாக அவர்களது தொண்டர்கள் நடவடிக்கையில் துவங்கி, மற்ற காட்சிகள் மேற்கொள்ளும் புதிய திட்டங்கள் என்ன? எத்தனை கோடி மக்கள் அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று எல்லாவற்றையும் தெரிந்துகொள்வார்கள். அப்படி தான் திமுகவும் தற்போது செயல்பட்டு கொண்டிருக்கிறது.

காவல் துறை மூலமாக ஒடுக்க திட்டம்

தவேக கட்சிக்கு மக்களின் ஆதரவு பலமாக உள்ளதால், தற்போது அந்த கட்சியை ஒழித்து கட்ட பல கட்ட முயற்சிகளை திமுக மேற்கொண்டு வருவதற்காக கூறப்படுகிறது. மேலும் அதிமுகவின் தொண்டர்களும் பெருவாரியாக தவேக கட்சியில் இணைவதாக தகவல் வெளிவந்துகொண்டு இருக்கிறது. சூழ்நிலை இப்படி இருக்க, திமுக வயிற்றில் புளியை கரைத்துள்ளது. பல ஆண்டு காலமாக திமுகவிலும் அதிமுகவில் தொண்டர்களாக இருப்பவர்கள் கூட இப்போது என்னவென்றால் தவேக கட்சியில் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து இணைந்துள்ளார்கள்.

இந்த நிலையில், கட்சி மாநாடு முடிந்தபிறகு ஒரு முக்கிய கூட்டமானது நடத்தப்பட்டு பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அப்படி, விஜய் அவர் தொண்டர்கள் சொந்த நிலத்தில் கட்சி கோடியை ஏற்றி மக்களுக்கு ப்ரொமோட் செய்ய சொல்லி இருந்தார். அதை ஒரு சிலர் செய்தார்கள். ஆனால் அதற்க்கு போலீஸ் மூலமாக தடுத்து நிறுத்தும் வேலையை திமுக பார்த்திருக்கிறது.

பொது இடங்களில் அனுமதி இன்றி, கொடி ஏற்றுவதோ, பேனர் வைப்பதோ சட்டத்துக்கு புறம்பானது. ஆனால் அதை தொடர்ந்து செய்துகொண்டு தான் இருக்கிறார்கள். போலீசும் கண்டும் காணாமல் தான் இருக்கிறார்கள். ஆனால் தவேக தொண்டர்கள் தங்கள் சொந்த நிலத்தில் கொடி ஏற்றியதற்கு, போலீசார் வந்து, அதை அகற்ற சொல்லி பிரச்சனை செய்திருக்கிறார்கள். இது ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது.

சொந்த நிலத்தில், சட்டத்துக்கு புறம்பான ஒன்றை நாங்கள் செய்யவில்லையே.. கட்சி கொடியை எங்கள் விருப்பத்தின் பெயரில் ஏற்றினோம்.. இதில் என்ன தவறு என்று தொண்டர்கள் கேட்டு வருகிறார்கள். மேலும் காவல் துறையை வைத்து தவேகவை ஒடுக்கும் பணியை திமுக மேற்கொண்டு வருகிறது என்றும் ஒரு சிலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Trending News