வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடக்கவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்கான அனைத்து கட்சிகளும் மும்முரமாக தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் திமுக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ள 173 வேட்பாளர்களின் பட்டியலை திமுக தலைவர் ஸ்டாலின் தற்போது வெளியிட்டுள்ளார்.
அதில் புதுமுகங்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படும் என்று தொண்டர்கள் எண்ணிக்கொண்டிருந்த நிலையில், அதற்கெல்லாம் மாறாக ஏற்கனவே அமைச்சர்களாக பதவி வகித்தவர்களின் வாரிசுகளுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதிலும் நேரிடை வாரிசுகள் 16 பேரும், 5 பேர் ஸ்டாலின் அவர்களின் குடும்ப உறுப்பினர்களாகவும் இருக்கின்றனர். இன்னும் குறிப்பாக பட்டியலில் இருக்கும் 21 நபர்கள் ஏற்கனவே திமுகவில் பதவி வகித்து வருகின்றனர்.
ஆகையால் அண்மையில் நடக்கவிருக்கும் சட்டப்பேரவை தேர்தல் வேட்புமனு பட்டியலில் திமுக குடும்பத்தை சேர்ந்தவர்களே ஆதிக்கம் செய்கின்றனர்.
எனவே திமுக கட்சியின் அடிமட்ட தொண்டர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதே தொண்டர்களின் கோரிக்கையாகும்.